பக்கம் எண் :

66ஆத்மாநாம் படைப்புகள்

தும்பி்

எனது ஹெலிகாப்டர்களைப்
பறக்க விட்டேன்
எங்கும் தும்பிகள்
எனது தும்பிகளைப்
பறக்க விட்டேன்
எங்கும் வெடிகுண்டு விமானங்கள்
எனது வெடிகுண்டு விமானங்களைப்
பறக்க விட்டேன்
எங்கும் அமைதி
எனது அமைதியைப்
பறக்க விட்டேன்
எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்