பக்கம் எண் :

70ஆத்மாநாம் படைப்புகள்

ஒரு கவிதை எனும் ஒரு கவிதை

என் கையெழுத்தை இழந்த ஒரு நாள்
போலியாய் என் மனம் காலியானது
சுற்றிலுமிருந்த வெட்டவெளிச்சம்
எனை ஆட்கொண்டது

ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை
காலை மாலை இரவு எல்லாம் நன்கு தெரிந்தன

ஒரே பாதையில் சுழலத் துவங்கினேன்
எல்லையற்ற பெருவெளியில் போலி மனம்

அவ்வப்போது சில முட்டைகள் உடைந்தன
என்னளவில் ஆகாயம் எனக்குள்

ஊஞ்சலில் திருகாணியாய் வலம் வந்து
சுமந்தேன் விட்டத்தைக் கால் மேல்