குளிர்க்கண்ணாடிகள் குளிர்க்கண்ணாடிகளை அணிந்துகொண்டேன் சாயம் பூசப்பட்ட உலகம் ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது சாயம் பூசப்பட்ட மனிதர்கள் என் கண்களை உற்றுப் பார்த்தனர் ஒருவன் என்னைக் கேட்டான் ஏன் இந்தக் கண்ணாடி ஆயிரம் காரணங்களை நான் கூற எத்தனித்தேன் உண்மையை அவன் நம்பவேயில்லை கண்ணாடியைக் கழற்றி வைத்தேன் உலகம் ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது |