பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்99

பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை
எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்
உன் பசிக்காக உணவு
சில அரிசி மணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர
உனக்கு பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர

இதனைச் சொல்வது
நான் இல்லை நீதான்