பக்கம் எண் :

Prose311

111. டாக்டர் போப் ஐயர்:

Unclaimed Property

தென்னார்க்காடு சுபா மாஜிஸ்ரேட்டாரவர்களாகிய மெஸ்தர் (இன்ன)

துரையவர்கள் சமூகத்துக்கு:

கடலூர் துக்குடி 2-வது கிளாஸ் சபார்டிநேட்டு மாஜிஸ்திரேட்டு

கோவிந்தராயர் எழுதிக்கொண்ட அர்ஜி:

தாலுக்காவில் தாக்கலாயிருக்கிற பேவாரிசி சாமான்களுக்குப் பட்டி அனுப்பும்படியாய் லேட் (late) தாலுகா மாஜிஸ்திரோடு பேரால் சமூகத்திலிருந்து வந்திருந்த உத்தரவு ரிக்கார்ட்டிலிருந்ததைப் பார்வையிட்டுக்கொண்டேன்.

சென்ற 1864 வருஷத்தில் பேவாரிசாய்த் தாலுக்காவில் தாக்கலாயிருக்கிற சொத்துக்களை உடையவர்கள் ஆஜராய்ப்பெற்றுக் கொள்ள வேண்டியது என்று இஸ்தியார் பிறப்பித்திருக்கிற விபரங் கண்டிருக்கிற பட்டி ஒன்று இத்துடன் அனுப்பியிருக்கிறேன்; மற்ற சாமான்களுக்கு பட்டி தயராகிக்கொண்டு வருவதை அப்போதைகப்போது உத்தரவுபடிக்கு அனுப்பிக்கொண்டு வருகிறேன் இது விவரம் தெரியவாவதாய் மனுவு செய்து கொண்டேன்.

 
தங்கள் விதேயன்.
1865´ ஜனவரி µ 31²
புதுப்பாளையம்
(அதிகாரம் 5, பக். 64.66)

Are you polite to me or to my fine clothes

(ஆ) ஒரு கல்விமான் ஒரு பட்டணத்துக்குப் போனபோது அவ்விடத்திற் தேசாந்தரிகளுக்கு விருந்திடுகிற உதாரமுள்ள ஒருவனைக் குறித்துக் கேள்விப்பட்டேன். அதற்கு மேற் தன்னுடைய பழந்துணியுடனே அவனிடத்திற்குப் போய்க் காத்திருந்தான். அவ்வுதாரி இவனுக்கொரு உதவியும் செய்யாதிருந்ததும் அன்றி (202) உட்காரவும் இடங்கொடுக்கவில்லை. ஆதலால் அந்த எழுத்து வாசனை உள்ளவன் கலக்கப்பட்டுப் போய்விட்டு, மறுநாள் ஓர் சிறப்பான உடுப்பை இரவலாக வாங்கி, அதை உடுத்திக்கொண்டு, அங்கே மறுபடியும் போனான். அவன் இவனைக் கண்டவுடநே மரியாதை பண்ணித், தன் அருகில் உட்கார்த்தி, வார்த்தை சொலிக் கொண்டிருந்து, பின்பு வந்தவனோடு போசனத்தில் உட்கார்ந்த உடனே, இந்தக்கல்விமான் ஒரு கவளத்தை எடுத்துக் தன் உடுப்பின் மேலே போட்டான். அதை வீட்டுக்காரன் பார்த்து, நீ ஏன் அதை