பக்கம் எண் :

102 

“சேரனின் நாயைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். மறுநாள் காலை வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால், உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறோம். நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். மைக்ரோ பிலிம் எடுத்து டெவலப் செய்து பார்க்க வேண்டும். அதில் உள்ள பெயர்களை அறிந்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து நாளை நடக்கப் போகும் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.”

ஹனிமேன் சொன்ன கொலை என்னும் வார்த்தை கமிஷனரின் இதயத்தில் ஓங்கி அடித்ததுபோல இருந்தது. அவர் துடித்தார். உடனே துடிப்போடு செயல்பட்டார். நாய்களைப் பிடித்து வைக்கும் நிலையத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அன்று பிடித்த நாய்களில் காக்கர்ஸ் ஸ்பானியல் ஒன்று உண்டா என்று கேட்டார். மறுமுனையில் வந்த பதிலை சுமார் மூன்று நிமிடம் ‘உம்.’ போட்டவாறு கேட்டார். பிறகு, ரிசீவரின் வாய்ப் பகுதியைக் கையால் மூடிக் கொண்டு எதிரே இருந்தவர்களைப் பார்த்துப் பேசினார்.

“காக்கர்ஸ் ஸ்பானியல் ஒன்று இருக்கிறது. சுமார் அரை மணி நேரமாய் ஒருவன், அங்கு வந்து அந்த நாய் இல்லாமல் என் குழந்தை சாப்பிடாது. இப்பவே அதைக் கொடுங்கள் என்கிறானாம். இருநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கவும் முன் வருகிறானாம்.”

கமிஷனர் சொன்னதும், “கமிஷனர் சார்! அந்த ஆசாமி ஜாக்கியாகத்தான் இருக்கணும்! அவன் தான் மைக்ரோ பிலிமை என்னிடமிருந்து பறிக்க ஊட்டியிலிருந்து விரட்டிக் கொண்டு வருகிறவன். மைக்ரோ பிலிம் நாயிடம் இருக்கிறதுன்னு சொன்னதும், நாயைத் தேடிப் புறப்பட