பக்கம் எண் :

100ஏழைகள்

20
அனைவரும் அவர்களே!


நெய்வேலியில் வேலையில் இருந்த கிட்டு, வேலை நேரத்தில் வடலூரில் கடைத்தெருவிற் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வேம்பு கண்டு கேட்டான்.

‘வேலை நேரத்தில் நெய்வேலியை விட்டு வடலூரில் இருக்கின்றாயே?’

கிட்டு :

நான் நெய்வேலியில் இருந்தேனா வடலூரில் இருந்தேனா என்று தீர்மானிப்பவன் பார்ப்பான் தானே.

  

வேம்பு :

மேற்பார்வையாளர் நீ அலுவலிடத்தில் இல்லை என்று குறித்துக்கொண்டு போய்விட்டால்...

  

கிட்டு :

அலுவலகத்தில் நான் இருந்தேனா இல்லையா என்று பார்க்க வருகின்ற பார்வையாளன் பார்ப்பான் தானே!

  

வேம்பு :

எழுதாமற் கிடக்கும் உன் எழுத்துப் புத்தகத்தைக் கொண்டு உன்மேற் குற்றம் சாட்ட மாட்டானா?

  

கிட்டு :

எழுதாமல் கிடக்கிறது-எழுதிக் கிடக்கிறது என்று தீர்மானிப்பவன் பார்ப்பான் தானே!