பக்கம் எண் :

102ஏழைகள்

21
அஞ்சிய உள்ளத்தில்...


வேங்கை ஒரு முரடன். தோள் வலி உடையவன் படிக்காதவன், அவன் செய்ததில் ஒரு வியப்பு என்ன எனில் படிக்காத வேங்கைக்கும் இந்த வேடப்புலியூரில் புகழ் உண்டு.

வேங்கை ஊருக்குப் புறத்தில் இருந்தது அவன் வீடு. அவன் வீட்டில் இளைஞர் பலர் மொய்த்துக் கொண்டு இருப்பார்கள். அந்த இளைஞர் அனைவரும் வேங்கைபால் வலிமிக்கவராகவும், புகழ் உடையவராகவும் விளங்க ஆசை உடையவர்கள்.

அவர்களில் புலிக்குட்டி என்பவன் ஒருவன். அந்தக் கூட்டத்திற்கு அவன் சட்டாம்பிள்ளையாய் விளங்கினான்.

ஒரு நாள் வேங்கையும், சட்டாம்பிள்ளையாகிய புலிக்குட்டியும் தனித்துப் பேசினார்கள். புதிய கண்டுபிடிப்பு ஒன்று!

புலிக்குட்டி சொன்னான், நாம் ஏன் சாப்பாட்டுக்குத் தொல்லைப் படவேண்டும்? வேடப்புலியூர் மக்களில் பெரும்பாலோர் ஏன் வெள்ளாட்டுக்கறியை நெய்யில் வேகவைத்து