பக்கம் எண் :

130ஏழைகள்

27
மான்களின் ஒற்றுமை கண்டு
அஞ்சி இறந்தது


அடுத்த காட்டில் ஒரு நரி இருந்தது. அந்த நரிக்குப் பெரிய காட்டிலிருக்கும் சிங்க அரசன் அதிகாரம் கொடுத்திருந்தது.

நரி அந்த அதிகாரத்த எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்றால்,

யானைகளை யெல்லாம் எங்கும் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எருமைகளையும், மாடுகளையும் அங்கிருக்கும் நரி, பெருநரி ஒன்றும்செய்யக்கூடாது. இப்படிப்பல.

இந்த வேலைகளை யெல்லாம் நரி பார்த்துக் கொள்வது உண்டு. ஆயினும் தன் அளவுக்கு மீறிய வேறு வகையிலும் கருத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டது. அதென்ன என்றால்,

இந்த நரிக்குப் புள்ளி விழுந்த தோல் என்றால் பிடிக்காது, அந்தக் காட்டிலோ புள்ளிமான்கள் நாளுக்கு நாள் மிகுதியாக வருகின்றன!