பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்133

28
காகத்தை என்செயப் படைத்தாய்?


பொதிகை மலையை அடுத்த காடு. அதன் பெயர் பொங்கக்காடு. அந்தக் காட்டில் முகிலி என்ற யானை, அரசு செலுத்தி வந்தது. அந்தக் காட்டிலிருந்த விலங்கு பறவைகளுக்கெல்லாம் அந்த அரசனிடம் மதிப்பு மிகுதி.

அந்தக் காட்டில் ஒரு பெரிய ஓடை, அந்த ஓடையை அடுத்தாற்போல் புல் அடர்ந்து மெத்தென்றிருக்கும் ஓர் அகன்ற வெளி. அந்த வெளியின் நடுவிலோர் பாறையும், நிழல் தருகின்ற வாகை மரமும் இருக்கும். அங்குத்தான் முகிலியரசன் நாடோறும் வந்து அமர்ந்து விலங்கு பறவைகள் சொல்லும் வழக்குகளைக் கேட்டுத் தீர்ப்புக் கூறுவான். இது இப்படியிருக்க, ஒரு நாள் காலையில் கடப்பாறைமூக்கன் என்னும் காக்கை இரைதேடப் பொதிகை மலைச்சாரலில் இருந்த வீட்டின் இறைப்பில் குந்தியிருந்தது. அவ்வீட்டின் கூடத்தில் ஒரு தமிழ்ப்புலவர் மற்றொருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்.

“கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
காகத்தை என்செயப் படைத்தாய்”