பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்139

30
தமிழ்ப் பற்று!


இருபதுஆண்டின் முன்னே, புதுவையில் ஒரு தமிழ்ப்புலவர்க்கு ஏற்பட்ட துயர்மிகு நிலையைப் பாவேந்தர் அறிந்து, மனம் வெதும்பி எழுதினார், இச்சிறுகதையை. தமிழாசிரியராகப் பன்னெடுங்காலம் பணியாற்றிய நம் பாவேந்தர், ஆசிரியர் நிலை உயருமட்டும், நாட்டின் முன் னேற்றம் முயற்கொம்பே என்று கருதினார். தமிழ்ப்புலவரை மதித்து நல்வாழ்வு அளித்தலே தமிழரின் தலையாய கடன் என்பதை இச்சிறுகதை எடுத்துக் கூறுகின்றது!

அவர்கள் உணர்ச்சியுள்ள இளைஞர்கள்; தமிழ்ப்பற்று மிக்கவர்கள்! சென்ற ஆண்டில் கோடையில் மாலைப்போதில் அவர்கள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கந்தசாமி சொன்னான், நம்மாலான தொண்டு செய்ய வேண்டும் என்று, கந்தசாமியின் அச்சொற்கள் மற்ற இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன! தமிழுக்குத் தொண்டுசெய்ய வேண்டும். ஆம்! என்று உறுதி செய்தார்கள் அனைவரும்.

தமிழ்க் கழகம் என்ற பெயரால் ஒரு நிறுவனம் நிறுவப்பெற்றது. ஆண்டு ஒன்றுக்குள் “தமிழ்க் கழகத்தில் வந்து