பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்57

8
பகுத்தறிவுத்தடை


மேலூர்க் கிராமம் மிக்க வளமுள்ளது; மிக்க பணக்காரர் நிறைந்த ஊர். அவ்வூரில் பல சந்தர்ப்பங்களில் சரியாய் ஒரு வருடகாலத்தில் 1,30,000 ரூபாய் திருட்டுப் போயிருக்கிறது, ரொக்க வகையிலும் நகை வகையிலும்.

இதற்கு மேலும் ஒருநாள் அதிகாலை முதற்கோழி கூவிற்று கண்ணு ரெட்டியார் வீட்டு வேலைக்காரி தெருக்கதவைத் திறந்தாள். வீட்டிற்கெதிரிலிருக்கும் மாட்டுக்கொட்டகையில் சாணம் எடுக்கப்போனாள். அச்சமயம் வீட்டின் உள்ளிலிருந்து ஓர் ஆள் கையில் ஒரு சிறு மூட்டையோடு வெளிப்பட்டான். அவன் கிழக்கு வீதியை நோக்கி விரைவாக நடந்தான். வேலைக்காரி, “வீட்டு ரெட்டியார் போகிறார்” என்று நினைத்தாள். அடுத்த நிமிஷம் வீட்டு ரெட்டியார் வெளியில் வந்தார்! வேலைக்காரிக்குச் சந்தேகம். அதோ வீட்டிலிருந்து கீழ வீதியாக ஓர் ஆள் போகிறார். அவர் யார் பாருங்கள்!

இதைக் கேட்டதும் ரெட்டியார் திடுக்கிட்டார். ஆளைத் தொடர்ந்து ஓடினார். திருடன் ‘பெத்த பெருமாள்’