பக்கம் எண் :

90ஏழைகள்

16
படம் இயக்கி (DIRECTOR) யின் தந்தை


‘வேலனுக்கு விண்ணப்பம்’ என்ற கதையின் படப்பிடிப்பு நடைபெறுகின்றது. பொன்னம்மா நாட்டியக்காரியாகச் சோடிக்கப்பட்டு படம் இயக்குவோனின் எதிரில் வந்து நிற்கின்றாள்.

படமுதலாளியும் படம் இயக்குவோனும் கொண்ட மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை.

அவளின் பெருத்திருந்த மார்பை நான்கு விரற்கடை அகலமுள்ள ஒரு கச்சை சுற்றி வந்து முதுகின்புறம் மூடியிட்டுக் கொண்டிருந்தது-தாவணி இல்லை.

ஆடினாள்! பாடினாள்! படப்பிடிப்பு நல்லபடி முடிந்தது.

‘வேலனுக்கு விண்ணப்பம்’ வெளிவந்து ஏறத்தாழ பன்னிரண்டு கிழமைகள் ஒடியது. படத்தின் வெற்றிக்குப் பொன்னம்மாவின் சோடிப்பே காரணம் என்று நம்பினார்கள், பட முதலாளியும் பட இயக்கியும்!

சில திங்கள் சென்றன. படம் இயக்கியின் இரண்டாவது தங்கை தங்கத்தின் ஆடல் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக