பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்97

19
முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு


திருப்புளிசாமி வீட்டுக்கு மருத்துவப் புலவர் ஒருவர் வந்தார். இனிப்பு நீர்ப்பிணி உடைய திருப்புளிசாமிக்கு மருத்துவப் புலவர் சொன்னார்.

ஒரு நாட் காலை வில்வத் துளிர் ஐந்தை வாயிற் போட்டு மென்று விழுங்க வேண்டும். மறுநாள் நாவற்றுளிர் ஐந்தைப் போட்டு மென்று விழுங்க வேண்டும். இப்படி நாற்பது நாட்கள் செய்து வந்தால் இனிப்பு நீர்ப்பிணி இராது; மீண்டும் வராது.

திருப்புளிசாமி மருத்துவப் புலவர்க்கு வேண்டிய மரியாதை செய்து அனுப்பிவிட்டுத் தன் வீட்டுக் கொல்லையில் ஒரு வில்வ மரத்தையும் ஒரு நாவல் மரத்தையும், வளர்க்கும்படி ஆட்களுக்குக் கட்டளை போட்டான்.

கொல்லையின் கட்டைச் சுவரைவிடச் சற்றே உயரமாக வளர்ந்திருந்தன, வில்வமும் நாவலும்.

நாள்தோறும் திருப்புளிசாமி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதுபற்றி திருப்புளி ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஏ. சி. -7