இதோ பாருங்கள்! பூமியில் ஏழைகள் அதிகப்பட்டு, தோட்டக் கூலிகளாகக் கப்பலேறக் கங்காணிகளைத் தேடுகிறார்கள்! ஏழைகள் அதிகப்படுகிறார்கள் என்று வருந்துவது பொருந்துமா? அதோ பாருங்கள் வானத்தில் ஏழைகள் எல்லாரும் தங்கள் தங்கள் முதலாளிகளாகிய கடவுள்களைச் சண்டை போடாதீர்கள் என்று வற்புறுத்துகிறார்கள்! இதோ பாருங்கள் பூமியில், மதச் சண்டையை நிறுத்துங்கள் என்கிறார்கள்......... சுயமரியாதைக்காரர்கள் சொல்லுகிறார்கள் :- அதோ பாருங்கள் வானத்தில் கடவுள்களும் ஏழைகட்சிக்கிரங்கிச் சண்டையை நிறுத்த மறுக்கிறார்கள்! இதோ பாருங்கள் பூமியில் மதத் தலைவர்கள் தமது போக்கிரித் தனத்தையும் நிறுத்த மறுக்கிறார்கள்! அதோ பாருங்கள் வானத்தில் சண்டையிடும் கடவுள்களை ஏழைகள் கண்டனம் செய்யக் கிளம்புகிறார்கள்! இதோ பாருங்கள் மதக்காரர்களாகிய குருக்கள் பாதிரிகள் முல்லாக்கள் ஆகியோரைக் கண்டிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆஸ்திகப் பெருச்சாளிகளே! இனி உங்கள் ஆஸ்திகப் போர்வை கிழிந்து உள்ளே புகுந்துள்ள உங்கள் உண்மையான யோக்கியதை வெட்டவெளிச்சம். - புதுவை முரசு, 6.4.1931. * |