|
12. முன் நிகழ்வு உரைத்து
ஊடல் தீர்த்தல்
|
|
|
|
|
| குரவம்
மலர்ந்த குவை இருட் குழலீ! |
|
| இருவேம்,
ஒருகால், எரி அதர் இறந்து, |
|
| விரிதலை,
தோல்முலை, வெள் வாய், எயிற்றியர்க்கு |
|
| அரும்
புது விருந்து எனப் பொருந்தி, மற்று-அவர் தரும் |
|
| இடியும்
துய்த்து, சுரைக் குடம் எடுத்து |
5
|
| நீள்
நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும், |
|
| பழம்
புற் குரம்பையிடம் புக்கு இருந்தும், |
|
| முடங்கு
அதள் உறுத்த, முகிழ்நகை எய்தியும், |
|
| உடன்உடன்
பயந்த கட ஒலி ஏற்றும், |
|
| நடைமலை
எயிற்றினிடைத் தலை வைத்தும், |
10
|
| உயர்ந்த
இன்பு-அதற்கு, ஒன்று உவமமும் உண்டு எனின், |
|
| (முலை
மூன்று அணைந்த சிலைநுதல்-திருவினை |
|
| அரு
மறை விதிக்கத் திருமணம் புணர்ந்து, |
|
| மதிக்
குலம் வாய்த்த மன்னவன் ஆகி, |
|
| மேதினி
புரக்கும் விதியுடை நல் நாள், |
15
|
| நடுவூர்
நகர் செய்து, அடுபவம் துடைக்கும் |
|
| அருட்குறி
நிறுவி, அருச்சனை செய்த |
|
| தேவ
நாயகன்) கூடல் வாழ் இறைவன் |
|
| முண்டகம்
மலர்த்தி, முருகு அவிழ் இரு தாள் |
|
| உறைகுநர்
உண்ணும் இன்பமே |
20
|
| அறையல்
அன்றி, மற்றொன்றினும் அடாதே! |
|