| 17.
உலகியல்பு உரைத்தல் |
|
|
|
|
| 'பழமை
நீண்ட குன்றக் குடியினள், |
|
| வருந்தாது
வளர்த்தும், குடங்கை துயிற்றியும், |
|
| மானின்
குழவியொடு கெடவரல் வருத்தியும், |
|
| பந்து
பயிற்றியும், பொற்கழங்கு உந்தவும், |
|
| பாவை
சூட்டவும், பூவை கேட்கவும், |
5
|
| உடைமை
செய்த மடமையள் யான்' என, |
|
| எம்
எதிர் கூறிய இம் மொழிதனக்குப் |
|
| பெருமை
நோக்கின் சிறுமை-அது உண்டே: |
|
| செறி
திரைப் பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற |
|
| செம்மகள்
கரியோற்கு அறுதி போக, |
10
|
| மகவின்
இன்பம் கடல் சென்றிலவால்; |
|
| அன்றியும்,
விடிமீன் முளைத்த தரளம், |
|
| வவ்வின
ரிடத்தும் அவ்வழி ஆன; |
|
| திரைக்
கடல் குடித்த கரத்த மா முனிக்கும், |
|
| திங்கள்
வாழ் குலம் தங்கும் வேந்தற்கும், |
15
|
| அமுத
ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் |
|
| தமிழ்
எனும் கடலைக் காணி கொடுத்த |
|
| பொதியப்
பொருப்பும், நெடு முதுகு வருந்திப் |
|
| பெற்று
வளர்த்த கல் புடை ஆரம் |
|
| அணியும்
மா மகிழ்நர் பதி உறை புகுந்தால், |
20
|
| உண்டோ
சென்றது? கண்டது உரைக்க: |
|
| பள்ளிக்
கணக்கர் உள்ளத்துப் பெற்ற |
|
| புறம்
ஆர் கல்வி, அற மா மகளைக் |
|
| கொண்டு
வாழுநர்க் கண்டு அருகு இடத்தும், |
|
| அவர்
மன அன்னை கவரக் கண்டிலம்; |
25
|
| பெருஞ்
சேற்றுக் கழனி கரும்பு பெறு காலை, |
|
| கொள்வோர்க்கு
அன்றி அவ் வயல் சாயா; |
|
| பூம்
பணை திரிந்து பொதி அவிழ் முளரியில், |
|
| காம்பு
பொதி நறவம் விளரியோடு அருந்தி, |
|
| கந்தித்
தண்டலை வந்து வீற்றிருந்து, |
30
|
| கடி
மலர்ப் பொழிலில் சிறிது கண் படுத்து, |
|
| மயக்கம்
நிறை காமத்து இயக்கம் கொண்டு, |
|
| நின்ற
நாரணன் பரந்த மார்பில் |
|
| கலவாக்
குங்குமம் நிலவிய தென்னக் |
|
| கார்
வான் தந்த பேர் கொள் செக்கரில், |
35
|
| வீதி
வாய்த் தென்றல் மெல்லென்று இயங்கும் |
|
| மூதூர்க்
கூடல் வந்தருள் முக்கணன் |
|
| (காமனை,
அயனை, நாமக் காலனை, |
|
| கண்ணால்,
உகிரால், மலர் கொள் காலால், |
|
| சுட்டும்,
கொய்தும், உதைத்தும், துணித்த |
40
|
| விட்டு
ஒளிர் மாணிக்க மலையின்) ஒரு பால், |
|
| அடங்கப்
படர்ந்த பசுங்கொடி-அதனை |
|
| வளர்த்த
சேண் மலை, உளத் துயர் கொண்டு |
|
| தொடர்ந்ததும்
இலை: கீழ் நடந்த சொல் கிடக்க-- |
|
| பாலைக்கிழத்தி
திருமுன் நாட்டிய |
45
|
| சூலத்
தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து |
|
| விடுதழல்
உச்சம் படு கதிர் தாக்க, |
|
| பாடல்சால்
பச்சைக் கோடகக் காற்றை, |
|
| மை
இல் காட்சிக் கொய் உளை நிற்ப, |
|
| வயிற்றில்
இருந்து வாய் முளைத்தென்ன |
50
|
| இரு
கால் முகனிற்கு அருகா, துரந்து, |
|
| படும்
அழல் நீக்கக் குட கடல் குளிக்கும் |
|
| நா-வாய்
குறியாத் தீ வாய் பாலையில்-- |
|
| தம்மில்
இன்பம் சூளுடன் கூடி, |
|
| ஒன்றி
விழைந்து சென்றாட்கு உடைந்து, |
55
|
| பொன்
பதி நீங்கி, உண்பது மடங்கி, |
|
| முழங்கப்
பெருங்குரல் கூஉய்ப் |
|
| பழங்கண்
எய்தியது பேதைமை அறிவே. |
|