|
2.
தாய் அறிவு கூறி வரைவு கடாதல்
|
|
| |
|
| 'பூ',
'மணி', 'யானை', 'பொன்', என எடுத்து, |
|
| திங்களும்,
புயலும், பரிதியும், சுமந்த |
|
| மலை வரும்
காட்சிக்கு உரியஆகலின், |
|
| நிறையுடைக்
கல்வி பெறு மதி மாந்தர் |
|
| ஈன்ற
செங் கவி எனத் தோன்றி, நனி பரந்து, |
5
|
| பாரிடை
இன்பம் நீளிடைப் பயக்கும் |
|
| பெரு நீர்
வையை வளை நீர்க் கூடல் |
|
| உடல்,
உயிர், என்ன உறைதரு நாயகன் |
|
| (கடுக்கை
மலர் மாற்றி வேப்பலர் சூடி, |
|
| ஐவாய்க்
காப்பு விட்டு அணி பூண் அணிந்து, |
10
|
| விரிசடை
மறைத்து மணி முடி கவித்து, |
|
| விடைக்கொடி
நிறுத்திக் கயற்கொடி எடுத்து, |
|
| வழுதி
ஆகி முழுது உலகு அளிக்கும், |
|
| பேர்
அருள் நாயகன்) சீர் அருள் போல, |
|
| மணத்துடன்
விரிந்த கைதைஅம் கானல், |
15
|
| நலத்
தொடர் வென்றிப் பொலம் பூண் குரிசில் |
|
| சின்னம்
கிடந்த கொடிஞ்சி மான் தேர், |
|
| நொச்சிப்
பூ உதிர் நள் இருள் நடு நாள், |
|
| விண்ணம்
சுமந்து தோற்றம் செய்தென, |
|
| தன் கண்போலும்
என்கண் நோக்கி, |
20
|
| கள்வரைக்
காணும் உள்ளம் போலச் |
|
| செம்
மனம் திருகி, உள்ளம் துடித்து, |
|
| புறன்
வழங்காது, நெஞ்சொடு கொதித்தனள், |
|
| மாறாக்
கற்பின் அன்னை-- |
|
| கூறு ஆம்
மதியத் திரு நுதற் கொடியே! |
25
|