| 22.
வேறுபடுத்துக் கூறல் |
|
|
|
|
| கண்ட
காட்சி, சேணின், குறியோ? |
|
| என்னுழி
நிலையா உள்ளத்தின் மதியோ? |
|
| சூர்ப்பகை-உலகில்
தோன்றினர்க்கு அழகு |
|
| விதிக்கும்
அடங்கா என்பன விதியோ? |
|
| என்னுடைக்
கண்ணும் உயிரும் ஆகி, |
5
|
| உள்
நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி-- |
|
| மலைக்குஞ்
சரத்தின் கடக் குழி ஆகி, |
|
| நெடு
மலை விழித்த கண்ணே ஆகி, |
|
| அம்
மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த |
|
| வெள்ளைகொள்
சிந்துர நல் அணி ஆகி, |
10
|
| தூர
நடந்த தாள் எய்ப்பு ஆறி |
|
| அமுதொடு
கிடக்கும் நிறைமதிப் பக்கம் |
|
| ஒருபால்
கிடந்த துணை மதி ஆகி, |
|
| அருவி
வீசப் பறவை குடிபோகி |
|
| விண்டு
நறவு ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய், |
15
|
| இளமை
நீங்காது காவல் கொள் அமுதம் |
|
| வரையர
மாதர் குழுவுடன் அருந்த |
|
| ஆக்கியிடப்
பதித்த வள்ளமும் ஆகி, |
|
| இடை
வளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர் |
|
| சிறு
முகம் காணும் ஆடி ஆகி, |
20
|
| சிறந்தன,
ஒரு சுனை, இம் மலை--ஆட, |
|
| அளவாக்
காதல் கைம்மிக்கு அணைந்தனள்: |
|
| அவளே
நீயாய், என் கண் குறித்த |
|
| தெருமரல்
தந்த அறிவு நிலை கிடக்க; |
|
| சிறிது,
நின் குறு வெயர் பெறும் அணங்கு ஆறி, |
25
|
| ஒரு
கணன் நிலைக்க மருவுதி ஆயின், |
|
| இந்
நிலை பெயர உன்னும் அக் கணத்தில், |
|
| தூண்டா
விளக்கின், ஈண்டு, அவள் உதவும்: |
|
| அவ்வுழி,
உறவு மெய் பெறக் கலந்து, இன்று, |
|
| ஒரு
கடல் இரண்டு திருப் பயந்தாங்கு, |
30
|
| வளைத்த
நெடுங் கார்ப் புனத்து, இருவீரும்-- |
|
| மணி
நிற ஊசல் அணி பெற உகைத்தும்; |
|
| கருங்
கால் கவணிடைச் செம்மணி வைத்து, |
|
| பெருந்தேன்
இறாலொடு குறி விழ எறிந்தும்; |
|
| வெண்
துகில் நுடங்கி, பொன் கொழித்து, இழியும் |
35
|
| அருவி
ஏற்றும்; முழை மலை கூஉயும்; |
|
| பெருஞ்
சுனை விழித்த நீலம் கொய்தும்; |
|
| கொடுமரம்
பற்றி, நெட்டிதண் பொலிந்து, |
|
| தினைக்
குரல் அறையும் கிளிக் கணம் கடிதிர்: |
|
| (வெள்ளி,
இரும்பு, பொன், எனப் பெற்ற |
40
|
| மூன்று
புரம் வேவ, திருநகை விளையாட்டு, |
|
| ஒரு
நாள், கண்ட பெருமான், இறைவன், |
|
| மாதுடன்
ஒன்றி, என் மனம் புகுந்து, |
|
| பேணா
உள்ளம் காணாது நடந்து, |
|
| கொலை
களவு என்னும் பழுமரம் பிடுங்கி, |
45
|
| பவர்
சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி, |
|
| அன்புகொடு
மேய்ந்த நெஞ்சமண்டபத்து, |
|
| பாங்குடன்
காணத் தோன்றி, உள் நின்று, |
|
| பொன்
மலர்ச் சோலை விம்மிய பெரு மலர் |
|
| இமையோர்
புரத்தை நிறை மணம் காட்டும் |
50
|
| கூடல்அம்
பதியகம் பீடுபெற இருந்தோன் |
|
| இரு
தாள் பெற்றவர் பெருந் திருப் போல) |
|
| மருவிய
பண்ணை இன்பமொடு விளைநலம் |
|
| சொல்லுடன்
அமராது ஈங்கு-- |
|
| வில்லுடன்
பகைத்த செந் திரு நுதலே! |
55
|