|
28. அறியாள் போன்று நினைவு கேட்டல்
|
|
| |
|
| பற்றலர்த்
தெறுதலும், உவந்தோர்ப் பரித்தலும், |
|
| வெஞ்
சுடர், தண் மதி, எனப் புகழ் நிறீஇய |
|
| நெட்டிலைக்
குறும் புகர்க் குருதி வேலவ! |
|
| (வேதியன்
படைக்க, மாலவன் காக்கப் |
|
| பெறாதது
ஓர் திரு உருத் தான் பெரிது நிறுத்தி, |
5
|
| அமுது
அயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய, |
|
| மதமலை
இரு-நான்கு பிடர் சுமந்து ஓங்கிச் |
|
| செம்
பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலுள், |
|
| அமையாத்
தண்ணளி உமையுடன் நிறைந்த |
|
| ஆலவாய்
உறைதரும் மூலக் கொழுஞ் சுடர்) |
10
|
| கருவி
வானம் அடிக்கடி பொழியும், |
|
| கூடம்
சூழ்ந்த நெடு முடிப் பொதியத்து-- |
|
| கண்
நுழையாது காட்சிகொடு தோற்றிய |
|
| வெறி
வீச் சந்தின் நிரை இடை எறிந்து, |
|
| மற்று
அது வேலி கொள வளைத்து, வளர் ஏனல் |
15
|
| நெடுங்
கால், குற்றுழி, இதணுழை காத்தும்; |
|
| தேவர்கோமான்
சிறை அரி புண்ணினுக்கு |
|
| ஆற்றாது,
பெரு முழை வாய் விட்டுக் கலுழ்ந்தென, |
|
| கமஞ்
சூற் கொண்மூ, முதுகு குடியிருந்து, |
|
| வான்
உட்க முரற்றும் மலைச் சுனை குடைந்தும்; |
20
|
| பிரசமும்,
வண்டும், இரவி தெறு மணியும், |
|
| வயிரமும்,
பொன்னும், நிரைநிரை கொழித்து, |
|
| துகில்
நான்று நுடங்கும் அருவி ஏற்றும்; |
|
| மறு
அறு செம்மணி கால் கவண் நிறுத்தி, |
|
| நிறைமதி
கிடக்கும் இறால் விழ எறிந்தும்; |
25
|
| எதிர்
சொல் கேட்பக் கால் புகத் திகைத்த |
|
| நெருக்கு
பொழில் புக்கு, நெடு மலை கூயும்; |
|
| நுசுப்பின்
பகைக்கு நூபுரம் அரற்றப் |
|
| பைங்
காடு நகைத்த வெண் மலர் கொய்தும்; |
|
| மனத்தொடு
கண்ணும் அடிக்கடி கொடுபோம் |
30
|
| செம்
பொன் செய்த வரிப் பந்து துரந்தும்; |
|
| இனைய,
பல் நெறிப் பண்ணை இயங்கும் |
|
| அளவாக்
கன்னியர்-அவருள், |
|
| உளம்
ஆம் வேட்கையள் 'இன்னள்' என்று உரையே. |
|