| 32.
வேழம் வினாதல் |
|
| |
|
| தன்
உடல் அன்றிப் பிறிது உண் கனை இருள் |
|
| பகல்
வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல, |
|
| பெரு
நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்-- |
|
| அண்ட
நாடவர்க்கு ஆர் உயிர் கொடுத்த |
|
| கண்டக்
கறையோன், கண்தரு நுதலோன், |
5
|
| முன்
ஒரு நாளில் நால் படை உடன்று |
|
| செழியன்
அடைத்த சென்னி பாட |
|
| எள்
அருங் கருணையின், நள் இருள் நடு நாள், |
|
| அவன்
எனத் தோன்றி அருஞ் சிறை விடுத்த |
|
| முன்னவன்
கூடல் மூதூர் அன்ன-- |
10
|
| வெண்
நகைச் செவ் வாய்க் கருங் குழல் மகளிர்! |
|
| செம்மணி
கிடந்த நும் பசும் புனத்து உழையால், |
|
| வாய்
சொரி மழைமதத் தழைசெவிப் புழைக் கைக் |
|
| குழிகண்
பரூஉத் தாள் கூர்ங் கோட்டு ஒருத்தல், |
|
| சினை
தழை விளைத்த பழுமரம் என்ன, |
15
|
| அறுகால்
கணமும், பறவையும், கணையும், |
|
| மேகமும்,
பிடியும், தொடர |
|
| ஏகியது
உண்டேல், கூறுவிர் புரிந்தே. |
|