| 44.
சொல்லாது ஏகல் |
|
| |
|
| இலது
எனின், உளது என்று, உள்ளமொடு விதித்தும் |
|
| சொல்லா
நிலை பெறும்; சூளுறின், மயங்கிச் |
|
| செய்
குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்; |
|
| உழை
நின்று அறிந்து, பழங்கண் கவர்ந்தும்; |
|
| கண்
எதிர் வைகி, முகன் கொளின் கலங்கியும்: |
5
|
| வழங்குறு
கிளவியின், 'திசை' என, மாழ்கியும்; |
|
| ஒரு
திசை நோக்கினும், இருக்கினும், உடைந்தும்; |
|
| 'போக்கு'
என உழையர், அயர்ப்பிடைக் கிளப்பினும், |
|
| முலைக்
குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் |
|
| செம்மணி
கரிந்து தீத்தர, உயிர்த்தும்; |
10
|
| 'போம்'
என வாய்ச் சொல் கேட்பினும், புகைந்தும்; |
|
| கொள்ளார்
அறுதியும், கொண்டோர் இசைத்தலும், |
|
| ஈது
எனக் காட்டிய மயல் மடவரற்கு-- |
|
| (முன்,
ஒரு வணிகன், மகப் பேறு இன்மையின், |
|
| மருமான்தன்னை
மகவு எனச் சடங்கு செய்து, |
15
|
| உள்ளமும்
கரணமும் அவனுழி ஒருக்கி, |
|
| முக்கவர்த்
திருநதி துணையுடன் மூழ்கி, |
|
| அப்
புலத்து உயிர் கொடுத்து, அருட்பொருள் கொண்டபின்; |
|
| மற்று
அவன் தாயம் வவ்வுறு மாக்கள், |
|
| காணி
கைக்கொண்ட மறு நிலை மைந்தனை, |
20
|
| நிரைத்துக்
கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும், |
|
| மைந்தனும்,
கேளிரும், 'மதி முடிக் கடவுள்! நின் |
|
| புந்தி
ஒன்று இன்றிப் புகல் இலம்' என்று அயர் |
|
| அவ்வுழி;
ஒரு சார், அவன் மாதுலன் என, |
|
| அறிவு-ஒளி
நிறைவே ஓர் உருத் தரித்து வந்து, |
25
|
| அருள்
வழக்கு ஏறி, அவர் வழக்கு உடைத்த |
|
| கூடல்
நாயகன் தாள் பணியார் என) |
|
| எவ்வழிக்
கிளவியின் கூறிச் |
|
| செவ்விதின்
செல்லும் திறன், இனி யானே? |
|