|
48.
தழை விருப்பு உரைத்தல்
|
|
| |
|
| அறுகும்
தும்பையும் அணிந்த செஞ் சடையும், |
|
| கலைமான்,
கணிச்சியும், கட்டிய அரவமும், |
|
| பிறிதும்
கரந்து, ஒரு கானவன் ஆகி, |
|
| அருச்சுனன்
அருந் தவம் அழித்து அமர் செய்து, அவன் |
|
| கொடுமரத்
தழும்பு திருமுடிக்கு அணிந்து, |
5
|
| பொன்னுடை
ஆவம் தொலையாது சுரக்கப் |
|
| பாசுபதக்
கணை பரிந்து அருள் செய்தோன்-- |
|
| வாசவன்
மகட் புணர்ந்து, மூன்று எரி வாழ, |
|
| தென்
கடல் நடுத் திடர் செய்து உறைந்து இமையவர் |
|
| ஊர்
உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த |
10
|
| மணி
வேற் குமரன் களிமகிழ் செய்த |
|
| பேர்
அருட் குன்றம் ஒரு பால் பொலிந்த |
|
| அறப்
பெருங்கூடல் பிறைச் சடைப் பெருமான்-- |
|
| திருவடிப்
பெருந்தேன் பருகுநர் போல, |
|
| மணமுடன்
பொதுளிய வாடா மலர்த் தழை |
15
|
| ஒரு
நீ விடுத்தனை; யான் அது கொடுத்தனன்; |
|
| அவ்வழிக்
கூறின்; அத் தழை வந்து |
|
| கண்
மலர் கவர்ந்தும், கைமலர் குவித்தும், |
|
| நெட்டுயிர்ப்பு
எறிந்தும் முலைமுகம் நெருக்கியும், |
|
| ஊடியும்,
வணங்கியும், உவந்து அளி கூறியும், |
20
|
| பொறை
அழி காட்சியள் ஆகி |
|
| நிறை
அழிந்தவட்கு நீ ஆயினவே! |
|