|
50.
ஊடல் தணிவித்தல்
|
|
| |
|
| அவ்வுழிஅவ்வுழிப்
பெய் உணவு உன்னி, |
|
| முகன்
பெறும் இரு செயல் அகன் பெறக் கொளுவும் |
|
| புல்லப்
பாண்மகன் சில்லையும் இன்றி; |
|
| இன்பக்
கிளவி அன்பினர்ப் போக்கி; |
|
| முடித்தலை
மன்னர் செருக்கு நிலை ஒருவி; |
5
|
| பொன்னுறு
ஞாழற் பூவுடன் கடுக்கும் |
|
| பேழ்வாய்ப்
புலி உகிர் சிறு குரல் விளங்க, |
|
| அமுதம்
துளிக்கும் குமுதவாய் குதட்டிப் |
|
| பழம்
கோள் தத்தை வழங்கு சொல் போலும் |
|
| மழலைக்
கிளவியும், இரு நிலத்து இன்பமும், |
10
|
| ஒரு
வழி அளிக்கும் இருங் கதிர்ச் சிறுவனை, |
|
| தழல்
விழி மடங்கல் கொலை அரிக் குருளையைப் |
|
| பொன்மலை
கண்ட பொலிவு போல, |
|
| மணிகெழு
மார்பத்து அணிபெறப் புகுதலின்; |
|
| (கறங்கு
இசை அருவி அறைந்து நிமிர் திவலையும், |
15
|
| துருத்தி
வாய் அதுக்கிய குங்குமக் காண்டமும், |
|
| குற
மகார் கொழிக்கும் கழை நித்திலமும், |
|
| நெடு
நிலை அரங்கில் பரிபெறு தரளமும், |
|
| புனம்
பட எறிந்த கார் அகில் தூமமும், |
|
| அந்தணர்
பெருக்கிய செந் தீப் புகையும், |
20
|
| வேங்கையின்
தாதுடன் விரும்பிய சுரும்பும், |
|
| கந்தி
விரி படிந்த மென் சிறை வண்டும், |
|
| சந்தனப்
பொங்கர்த் தழைச் சிறை மயிலும், |
|
| முன்றில்
அம் பெண்ணைக் குடம்பை கொள் அன்றிலும், |
|
| ஒன்றினொடு
ஒன்று சென்று தலை மயங்கும் |
25
|
| குளவன்
குன்றக் கூடல் அம் பதி நிறை, |
|
| மஞ்சு
அடை குழல் பெறு செஞ் சடைப் பெருமான்-- |
|
| அருந்
தமிழ்க் கீரன் பெருந் தமிழ்ப் பனுவல் |
|
| வாவியில்
கேட்ட காவிஅம் களத்தினன்-- |
|
| திருக்கண்
கண்ட பெருக்கினர்போல) |
30
|
| முளரிஅம்
கோயில் தளைவிட வந்து, |
|
| நல்லறம்
பூத்த முல்லைஅம் திருவினள்! |
|
| நின்
உளத்து இன்னல் மன் அறக் களைந்து, |
|
| பொருத்தம்
காண்டி--வண்டு ஆரும் |
|
| அருத்தி
அம் கோதை மன்னவன் பாலே. |
35
|