|
51.
குலமுறை கூறி மறுத்தல்
|
|
| |
|
| பெரு
மறை நூல் பெறக் கோன்முறை புரக்கும் |
|
| பெருந்தகை
வேந்தன் அருங் குணம் போல, |
|
| மணந்தோர்க்கு
அமுதும், தணந்தோர்க்கு எரியும், |
|
| புக்குழிப்
புக்குழிப் புலன் பெறக் கொடுக்கும் |
|
| மலையத்
தமிழ்க் கால் வாவியில் புகுந்து |
5
|
| புல்
இதழ்த் தாமரைப் புது முகை அவிழ்ப்ப, |
|
| வண்டினம்
படிந்து மதுக் கவர்ந்து உண்டு, |
|
| சேயிதழ்க்
குவளையின் நிரை நிரை உறங்கும் |
|
| நிலை
நீர் நாடன்--நீயே: இவளே-- |
|
| மலை
உறை பகைத்து, வான் உறைக்கு அணக்கும் |
10
|
| புட்குலம்
சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம் |
|
| பெருந்தேன்
கவரும் சிறுகுடி மகளே: நீயே--
|
|
| ஆயமொடு
ஆர்ப்ப, அரிகிணை முழக்கி, |
|
| மாயா
நல் அறம் வளர் நாட்டினையே: இவளே--
|
|
| தொண்டகம்
துவைப்ப, தொழிற் புனம் வளைந்து, |
15
|
| பகட்டினம்
கொல்லும் பழி நாட்டவளே: நீயே--
|
|
| எழு
நிலை மாடத்து இள முலை மகளிர் |
|
| நடம்
செயத் தரளவடம் தெறு நகரோய்: இவளே--
|
|
| கடம்
பெறு கரிக் குலம் மடங்கல் புக்கு அகழத் |
|
| தெறித்திடு
முத்தம் திரட்டு வைப்பினளே:நீயே--
|
20
|
| அணிகெழு
நவமணி அலர் எனத் தொடுத்த |
|
| பொற்கொடித்
தேர்மிசைப் பொலிகுவை அன்றே: இவளே--
|
|
| மணி
வாய்க் கிள்ளை துணியாது அகற்ற, |
|
| நெட்டிதண்
ஏறும் இப் புனத்தினளே: |
|
| ஆதலின்,
பெரும் புகழ் அணைகுதி ஆயின், |
25
|
| (நாரணன்
பாற, தேவர் கெட்டு ஓட, |
|
| வளி
சுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக் |
|
| கரு
முகில் வளைந்து பெருகியபோல, |
|
| நிலை
கெடப் பரந்த கடல் கெழு விடத்தை |
|
| மறித்து,
அவர் உயிர் பெறக் குறித்து உண்டருளி, |
30
|
| திருக்களம்
கறுத்த அருட் பெரு நாயகன்) |
|
| கூடல்
கூடினர் போல, |
|
| நாடல்
நீ--இவள் கழைத் தோள் நசையே. |
|