|
63.
பள்ளியிடத்து ஊடல்
|
|
| |
|
| நீரர
மகளிர் நெருக்குபு புகுந்து |
|
| கண்
முகம் காட்டிய காட்சித்து என்ன, |
|
| பெருங்
குலை மணந்த நிறைநீர்ச் சிறைப் புனல் |
|
| மணி
நிறப் படாம் முதுகு இடையறப் பூத்து, |
|
| சுரும்பொடு
கிடந்த சொரி இதழ்த் தாமரை |
5
|
| கண்ணினும்
கொள்ளாது உண்ணவும் பெறாது, |
|
| நிழல்
தலைமணந்து புனல் கிடவாது, |
|
| விண்
உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த |
|
| வானவர்
மங்கையர் மயக்கம் போல, |
|
| பிணர்க்
கரு மருப்பின் பிதிர்பட உழக்கி, |
10
|
| வெண்
கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து, |
|
| கடுக்கைச்
சிறு காய் அமைத்த வாற் கருப்பை |
|
| இணை
எயிறு என்ன இடைஇடை முள் பயில் |
|
| குறும்
புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்து, |
|
| செங்
கட் பகடு தங்கு வயல் ஊரர்க்கு, |
15
|
| (அரு
மறை விதியும், உலகியல் வழக்கும், |
|
| கருத்து
உறை பொருளும், விதிப்பட நினைந்து, |
|
| வடசொல்
மயக்கமும் வருவன புணர்த்தி, |
|
| ஐந்
திணை வழுவாது அகப்பொருள் அமுதினை, |
|
| குறுமுனி
தேறவும், பெறுமுதல் புலவர்கள் |
20
|
| ஏழ்-எழு
பெயரும் கோது அறப் பருகவும், |
|
| புலனெறி
வழக்கில் புணர் உலகவர்க்கும், |
|
| முன்
தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும், |
|
| நின்று
அறிந்து உணர, தமிழ்ப் பெயர் நிறுத்தி, |
|
| எடுத்துப்
பரப்பிய இமையவர் நாயகன் |
25
|
| மெய்த்
தவக் கூடல்) விளைபொருள் மங்கையர் |
|
| முகத்தினும்,
கண்ணினும், முண்டக முலையினும், |
|
| சொல்லினும்,
துவக்கும் புல்லம் போல |
|
| எம்
இடத்து இலதால்; என்னை, |
|
| தம்
உளம் தவறிப் போந்தது இவ் இடனே? |
30
|