|
67.
ஊடல் நீட வாடி உரைத்தல்
|
|
| |
|
| நிரை
வளை ஈட்டமும், தரளக் குப்பையும், |
|
| அன்னக்
குழுவும், குருகு அணி இனமும், |
|
| கருங்
கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும், |
|
| முட
வெண் தாழை ஊழ்த்த முள் மலரும், |
|
| அலவன்
கவைக் கால் அன்ன வெள் அலகும், |
5
|
| வாலுகப்
பரப்பின் வலை வலிது ஒற்றினர்க்கு, |
|
| 'ஈது'
என அறியாது ஒன்றி, வெள் இடையாம் |
|
| மாதுடைக்
கழிக் கரைச் சேரி ஓர் பாங்கர், |
|
| புள்ளொடு
பிணங்கும் புள் கவராது |
|
| வெள்
இற உணங்கல் சேவல் ஆக, |
10
|
| உலகு
உயிர் கவரும் கொலை நிலைக் கூற்றம் |
|
| மகள்
எனத் தரித்த நிலை அறிகுவனேல்; |
|
| (விண்
குறித்து எழுந்து, மேலவர்ப் புடைத்து, |
|
| நான்முகன்-தாங்கும்
தேனுடைத் தாமரை |
|
| இதழும்
கொட்டையும் சிதறக் குதர்ந்து, |
15
|
| வானவர்க்கு
இறைவன் கடவு கார் பிடித்துப் |
|
| பஞ்சு
எழப் பிழிந்து தண் புனல் பருகி, |
|
| ஐந்து
எனப் பெயரிய நெடு மரம் ஒடித்து, |
|
| கண்
உளத்து அளவா எள்ளுணவு உண்டு, |
|
| பொரி
எனத் தாரகைக் கணன் உடல் கொத்தி, |
20
|
| அடும்
திறல் அனைய கொடுந் தொழில் பெருக்கிய |
|
| மாயா
வரத்த பெருங் குருகு அடித்து, |
|
| வெண்
சிறை முடித்த செஞ் சடைப் பெருமான்) |
|
| கூடற்கு
இறையோன், குறி, உரு, கடந்த |
|
| இரு
பதம் உளத்தவர் போல, |
25
|
| மருவுதல்
ஒருவும் மதியா குவனே. |
|