|
68.
பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
|
|
| |
|
| சிலை
நுதல் கணை விழித் தெரிவையர் உளம் என |
|
| ஆழ்ந்து,
அகன்று, இருண்ட சிறை நீர்க் கயத்துள், |
|
| எரி
விரிந்தன்ன பல் தளத் தாமரை! |
|
| நெடு
மயல் போர்த்த உடல் ஒருவேற்கு, |
|
| குரு
மணி கொழிக்கும் புனல் மலைக் கோட்டுழி |
5
|
| நின்
பதி மறைந்த நெட்டிரவகத்துள், |
|
| குருகும்
புள்ளும் அருகு அணி சூழ, |
|
| தேனொடும்
வண்டொடும் திருவொடும் கெழுமி, |
|
| பெருந்
துயில் இன்பம் பொருந்துபு நடுநாள், |
|
| காணும்
நின் கனவுள், நம் கவர் மனத்தவரைக் |
10
|
| கொய்
உளைக் கடு மான் கொளுவிய தேரொடு, |
|
| 'பூ
உதிர் கானற்புறம் கண்டனன்' என, |
|
| சிறிது
ஒரு வாய்மை உதவினை அன்றேல்-- |
|
| (சேகரம்
கிழித்த நிறைமதி உடலம் |
|
| கலை,
கலை சிந்திய காட்சியது என்ன, |
15
|
| கடுமான்
கீழ்ந்த கடமலைப் பல் மருப்பு |
|
| எடுத்துஎடுத்து
உந்தி, மணிக் குலம் சிதறி, |
|
| கிளைஞர்கள்
நச்சாப் பொருளினர் போல, |
|
| சாதகம்
வெறுப்ப, சரிந்து அகழ்ந்து ஆர்த்து, |
|
| திரள்
பளிங்கு உடைத்துச் சிதறுவதென்ன, |
20
|
| வழி
எதிர் கிடந்த உலமுடன் தாக்கி, |
|
| வேங்கையும்
பொன்னும் ஓர் உழித் திரட்டி |
|
| வரையர
மகளிர்க்கு அணி அணி கொடுத்து, |
|
| பனைக்கைக்
கடமா எருத்துறு பூழி |
|
| வண்டு
எழுந்து ஆர்ப்ப, மணி எடுத்து அலம்பி, |
25
|
| மயில்
சிறை ஆற்ற, வலிமுகம் பனிப்ப, |
|
| எதிர்
சுனைக் குவளை மலர்ப் புறம் பறித்து |
|
| வரையுடன்
நிறைய மாலை இட்டாங்கு, |
|
| நெடு
முடி அருவி அகிலொடு கொழிக்கும் |
|
| கயிலை
வீற்றிருந்த கண்ணுதல் விண்ணவன், |
30
|
| நாடகக்
கடவுள்) கூடல் நாயகன் |
|
| தாமரை
உடைத்த காமர் சேவடி |
|
| நிறை
உளம் தரித்தவர் போல, |
|
| குறை
உளம் நீங்கி இன்பாகுவனே. |
|