|
69.
பதி பரிசு உரைத்தல்
|
|
| |
|
| எரி
தெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை; |
|
| முகில்
தலை சுமந்து ஞிமிறு எழுந்து இசைக்கும் |
|
| பொங்கருள்
படுத்த மலர் கால் பொருந்துக! |
|
| கடுங்
கடத்து, எறிந்த கொடும் புலிக்கு ஒடுங்கினை; |
|
| வரி
உடற் செங் கண் வராலினம் எதிர்ப்ப, |
5
|
| உழவக்
கணத்தர் உடைவது நோக்குக! |
|
| கொலைஞர்
பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை; |
|
| வேதியர்
நிதி மிக விதிமகம் முற்றி, |
|
| அவபிர
தத்துறை ஆடுதல் கெழுமி, |
|
| பொன்
உருள் வையம் போவது காண்க! |
10
|
| ஆறு
அலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை; |
|
| பணைத்து
எழு சாலி நெருக்குபு புகுந்து, |
|
| கழுநீர்
களைநர்தம் கம்பலை காண்க! |
|
| தழல்
தலைப்படுத்த பரல் முரம்பு அடுத்தனை; |
|
| சுரி
முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த |
15
|
| குளிர்
வெண் தரளக் குவால் இவை காண்க! |
|
| அலகை
நெட்டிரதம் புனல் எனக் காட்டினை; |
|
| வன்மீன்
நெடுங் கயல் பொதி வினையகத்துக் |
|
| கிடங்கு
எனப் பெயரிய கருங் கடல் காண்க! |
|
| முனகர்கள்
பூசல் துடி ஒலி ஏற்றனை; |
20
|
| குடுமிஅம்
சென்னியர் கரு முகில் விளர்ப்பக் |
|
| கிடை
முறை எடுக்கும் மறை ஒலி கேண்மதி! |
|
| அமரர்கள்,
முனிக் கணத்தவர், முன் தவறு |
|
| புரிந்து,
உடன் உமை கண் புதைப்ப, மற்று, உமையும் |
|
| ஆடகச்
சயிலச் சேகரம் தொடர்ந்த |
25
|
| ஒற்றைஅம்
பசுங் கழை ஒல்கிய போல, |
|
| உலகு
உயிர்க்கு உயிர் எனும் திருஉரு அணைந்து, |
|
| வளைக்
கரம்கொடு கண் புதைப்ப, அவ்வுழியே |
|
| உலகு
இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர், |
|
| பிரமன்
உட்பட்ட நில உயிர் அனைத்தும் |
30
|
| தமக்கு
எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும், |
|
| மற்று-அவர்
மயக்கம் கண்டு, அவர் கண் பெறத் |
|
| திரு
நுதல் கிழித்த தனி விழி நாயகன் |
|
| தாங்கிய
கூடல்-பெரு நகர் |
|
| ஈங்கு
இது காண்க!--முத்து எழில் நகைக் கொடியே! |
35
|