|
9. அறத்தொடு நிற்றல்
|
|
|
|
|
| தன்னுழைப்
பல உயிர் தனித்தனி படைத்துப் |
|
| பரப்பிக்
காட்டலின், பதுமன் ஆகியும்; |
|
| அவ்
உயிர், எவ் உயிர், அனைத்தும் காத்தலின், |
|
| செவ்வி
கொள் கரு முகிற் செல்வன் ஆகியும்; |
|
| கட்டிய
கரை வரம்பு உட்புக அழித்து, |
5
|
| நீர்
தலை தரித்தலின், நிமலன் ஆகியும்; |
|
| தருவும்
மணியும் சங்கமும் கிடைத்தலின், |
|
| அரி
முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்; |
|
| மூன்று
அழல், நான்மறை, முனிவர் தோய்ந்து, |
|
| மறை
நிர் உகுத்தலின், மறையோன் ஆகியும்; |
10
|
| மீனும்,
கொடியும், விரிதிணை ஐந்தும், |
|
| தேன்
உறை தமிழும், திரு உறை கூடலும், |
|
| மணத்தலின்,
மதிக் குல மன்னவன் ஆகியும்; |
|
| நவ
மணி எடுத்து நல் புலம் காட்டலின், |
|
| வளர்
குறி மயங்கா வணிகன் ஆகியும்; |
15
|
| விழைதரும்
உழவும், வித்தும், நாறும், |
|
| தழைதலின்,
வேளாண் தலைவன் ஆகியும்; |
|
| விரிதிரை
வையைத் திரு நதி சூழ்ந்த |
|
| மதுரை
அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்-- |
|
| இணை
அடி வழுத்தார் அணை தொழில் என்ன, |
20
|
| கைதைஅம்
கரை சேர் பொய்தற்பாவையோடு, |
|
| இரு
திரை எடுக்கப் பொருதிரை எடுத்தும், |
|
| பூழிப்
போனகம் பொதுவுடன் உண்டும், |
|
| சாய்
தாள் பிள்ளை தந்து கொடுத்தும், |
|
| முட
உடற் கைதை மடல் முறித்திட்டும், |
25
|
| கவைத்
துகிர்ப் பாவை கண்ணி சூடக் |
|
| குவலயத்
திரு மலர் கொணர்ந்து கொடுத்தும், |
|
| நின்றான்
உண்டு ஒரு காளை; |
|
| என்றால்,
இத் தொழில் செய்வது புகழே? |
|