|
90.
பாணன் புலந்து உரைத்தல்
|
|
| |
|
| இலவு
அலர் தூற்றி, அனிச்சம் குழைத்து, |
|
| தாமரை
குவித்த காமர் சேவடித் |
|
| திருவினள்
ஒரு நகை அரிதினின் கேண்மோ: |
|
| எல்லாம்
தோற்ற இருந்தன தோற்றமும், |
|
| தன்னுள்
தோன்றித் தான் அதில் தோன்றாத் |
5
|
| தன்னிடை
நிறையும் ஒரு தனிக் கோலத்து, |
|
| ஒரு
வடிவு ஆகிய பழ மறை வேதியன்; |
|
| (நான்மறைத்
தாபதர் முத் தழற்கனல் புக்கு |
|
| அரக்கர்
துய்த்து உடற்றும் அதுவே மான, |
|
| பாசடை
மறைத்து எழு முளரி அம் கயத்துள் |
10
|
| காரான்
இனங்கள் சேடு எறிந்து உழக்கும் |
|
| கூடற்கு
இறையவன்;) காலற் காய்ந்தோன்; |
|
| திரு
நடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை, |
|
| எங்கையர்
குழுமி, "எமக்கும் தங்கையர்ப் |
|
| புணர்த்தினன்
பாண் தொழில் புல்லன்" என்று, இவனை, |
15
|
| கோலின்,
கரத்தின், தோலின், புடைப்ப-- |
|
| கிளை
முள் செறித்த வேலிஅம் படப்பைப் |
|
| படர்
காய்க்கு அணைந்த புன் கூழைஅம் குறு நரி, |
|
| உடையோர்
திமிர்ப்ப, வரும் உயிர்ப்பு ஒடுக்கி |
|
| உயிர்
பிரிவுற்றமை காட்டி, அவர் நீங்க |
20
|
| ஓட்டம்
கொண்டன கடுக்கும்-- |
|
| நாட்டவர்
தடைய, மற்று, உதிர்த்து நடந்ததுவே! |
|