|
98.
மெலிவு கண்டு செவிலி கூறல்
|
|
| |
|
| கதிர்
நிரை பரப்பும் மணி முடித் தேவர்கள் |
|
| கனவிலும்
காணாப் புனைவு அருந் திருவடி |
|
| மா
நிலம் தோய்ந்து ஓர் வணிகன் ஆகி, |
|
| எழுகதிர்
விரிக்கும் திரு மணி எடுத்து-- |
|
| வரையாக்
கற்புடன் நான்கு எனப் பெயர் பெற்று, |
5
|
| ஆங்குஆங்கு,
ஆயிர கோடி சாகைகள் |
|
| மிடலொடு
விரித்து, சருக்கம், பாழி, |
|
| வீயா
அந்தம் பதம், நிரை நாதம், |
|
| மறைப்பு,
புள்ளி, மந்திரம், ஒடுக்கம், என்று |
|
| இனையவை
விரித்துப் பல பொருள் கூறும்-- |
10
|
| வேதம்
முளைத்த ஏதம் இல் வாக்கால் |
|
| குடுமிச்
சேகரச் சமன் ஒளி சூழ்ந்த |
|
| நிறை
மதி நான்கின் நிகழ்ந்தன குறியும்; |
|
| குருவிந்தம்,
சௌகந்தி, கோவாங்கு, |
|
| சாதரங்கம்,
எனும் சாதிகள் நான்கும்; |
15
|
| தேக்கின்,
நெருப்பின், சேர்க்கின், அங்கையின், |
|
| தூக்கின்,
தகட்டின், சுடர்வாய் வெயிலின், |
|
| குச்சையின்,
மத்தகக் குறியின், ஓரத்தின், |
|
| நெய்த்துப்
பார்வையின், நேர்ந்து சிவந்து, ஆங்கு, |
|
| ஒத்த
நற்குணம் உடைய பன்னிரண்டும்; |
20
|
| கருகி
நொய்து ஆதல், காற்று, வெகுளி, |
|
| திருகல்,
முரணே, செம்மண், இறுகல், |
|
| மத்தகக்
குழிவு, காசம், இலைச்சுமி, |
|
| எச்சம்,
பொரிவு, புகைதல், புடாயம், |
|
| சந்தை,
நெய்ப்பு இலி, எனத் தரு பதினாறு |
25
|
| முந்திய
நூலில் மொழிந்தன குற்றமும்; |
|
| சாதகப்புட்
கண், தாமரை, கழுநீர், |
|
| கோபம்,
மின்மினி, கொடுங்கதிர், விளக்கு, |
|
| வன்னி,
மாதுளம் பூ, விதை, என்னப் |
|
| பன்னு
சாதரங்க ஒளிக் குணம் பத்தும்; |
30
|
| செம்பஞ்சு,
அரத்தம், திலகம், உலோத்திரம், |
|
| முயலின்
சோரி, சிந்துரம், குன்றி, |
|
| கவிர்
அலர், என்னக் கவர் நிறம் எட்டும்; |
|
| குருவிந்
தத்தில் குறித்தன நிறமும்; |
|
| அசோகப்
பல்லவம், அலரி, செம்பஞ்சு, |
35
|
| கோகிலக்
கண், நீடு இலவு அலர், செம்பு, எனத் |
|
| தரு
சௌகந்திதன் நிறம் ஆறும்; |
|
| செங்கல்,
குராமலர், மஞ்சள், கோவை, |
|
| குங்குமம்,
அஞ்சில் கோவாங்கு, நிறமும்; |
|
| திட்டை,
ஏறு, சிவந்த விதாயம், |
40
|
| ஒக்கல்,
புற்று ஆம் குருதி, தொழுனை, |
|
| மணி,
கோகனகம், கற்பம், பாடி, |
|
| மாங்கிசகந்தி,
வளர் காஞ்சு, உண்டை, என்று |
|
| ஆங்கு
ஒரு பதின் மூன்று அடைந்தன குற்றமும்; |
|
| இவை
எனக் கூறிய நிறை அருட் கடவுள் |
45
|
| கூடல்
கூடா குணத்தினர் போல) |
|
| முன்னையள்
அல்லள்! முன்னையள் அல்லள்! |
|
| அமுத
வாய்க் கடு விழிக் குறுந் தொடி நெடுங் குழற் |
|
| பெருந்
தோட் சிறுநகை முன்னையள் அல்லள்! |
|
| உலகியல்
மறந்த கதியினர் போல |
50
|
| நம்முள்
பார்வையும் வேறு வேறு ஆயின; |
|
| பகழி
செய் கம்மியர் உள்ளம் போல |
|
| ஐம்
புலக் கேளும் ஒரு வாய்ப் புக்கன; |
|
| அதிர்
உவர்க் கொக்கின் களவு உயிர் குடித்த |
|
| புகர்
இலை நெடு வேல் அறுமுகக் குளவன், |
55
|
| தகரம்
கமழும் நெடு வரைக் காட்சி |
|
| உற்றனள்
ஆதல் வேண்டும், |
|
| சிற்றிடைப்
பெருந்தோள் தேமொழி தானே! |
|