| தொடக்கம் |
81-90
|
|
|
|
|
|
81.
வறும் புனம் கண்டு வருந்தல்
|
|
| |
|
| உள்
இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும் |
|
| அளவாத்
திரு மணி அளித்த லானும், |
|
| கொலை
முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து |
|
| கொழுஞ்
சினை மிடைந்து களிரொடு பொதுளிய |
|
| நெடு
மரத்து இளங்கா நிலைத்தலானும், |
5
|
| பாசடை
உம்பர் நெடுஞ் சுனை விரிந்த |
|
| பேர்
இதழ்த் தாமரை பெருகலானும், |
|
| நெடு
விசும்பு அணவும் பெரு மதி தாங்கி, |
|
| உடையா
அமுதம் உறைத லானும், |
|
| இளமையும்,
தொங்கலும், இன்பமும் ஒருகால் |
10
|
| வாடாத்
தேவர்கள் மணத்த லானும், |
|
| நூறுடை
மகத்தில் பேறு கொண்டிருந்த |
|
| புரந்தரன்
போலும்--பொன் எயில் எறிந்த |
|
| மணி
வேற் குமரன்--திரு வளர் குன்றம் |
|
| பேர்
அணி உடுத்த பெரு நகர்க் கூடல் |
15
|
| கோயில்
கொண்டிருந்த குணப் பெருங் குன்றம், |
|
| (அருந்
தவக் கண்ணினோடு இருந்த மா முனிபால், |
|
| பேர்
இருள் மாயைப்பெண், மகவு இரக்க, |
|
| உவர்
முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்துக் |
|
| கொடுத்த
மெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய |
20
|
| ஏழு
நீர்ச் சகரர்கள், ஏழ் அணி நின்று, |
|
| மண்
புக மூழ்கிய வான் பரி பிணிக்க, |
|
| பல்
முக விளக்கின் பரிதியில் தோட்டிய |
|
| வேலைக்
குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த |
|
| பெருங்
கார்க் கருங் கடு அரும்பிய மிடற்றோன்; |
25
|
| எறிந்து
வீழ் அருவியும், எரிமணி ஈட்டமும், |
|
| உள்ளுதோறு
உள்ளுதோறு உள்நா அமுது உறைக்கம் |
|
| திரு
முத்தமிழும், பெருகு தென் மலயத்து |
|
| ஆரப்
பொதும்பர் அடை குளிர் சாரல், |
|
| சுரும்புடன்
விரிந்த துணை மலர்க் கொடியே! |
30
|
| விண்
விரித்து ஒடுக்கும் இரவி வெண் கவிகைக்கு |
|
| இட்டு
உறை காம்பு என விட்டு எழு காம்பே! |
|
| மரகதம்
சினைத்த சிறை மயிற்குலமே! |
|
| நீலப்
போதும் பேதையும் விழித்த |
|
| பொறி
உடல் உழையே! எறிபரல் மணியே! |
35
|
| பாசிழைப்
பட்டு நூல் கழி பரப்பிய |
|
| கிளைவாய்க்
கிளைத்த வளைவாய்க் கிளியே! |
|
| மைந்தர்கண்
சென்று மாதர் உள் தழைத்த |
|
| பொழி
மதுப் புது மலர்ப் போக்குடைச் சுரும்பே! |
|
| வெறி
முதிர் செம் மலர் முறிமுகம் கொடுக்கும், |
40
|
| சந்தனப்
பொதும்பர்த் தழை சினைப் பொழிலே! |
|
| கொள்ளை
அம் சுகமும் குருவியும் கடிய |
|
| இரு
கால் கவணிற்கு எறி மணி சுமந்த |
|
| நெடுங்
கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே! |
|
| நெருநல்
கண்ட எற்கு உதவுழி இன்பம் |
45
|
| இற்றையின்
கரந்த இருள் மனம் என்னை? |
|
| இவண்
நிற்க வைத்த ஏலாக் கடுங்கண் |
|
| கொடுத்து
உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்; |
|
| ஈங்கு
இவை கிடக்க: என் நிழல் இரும் புனத்து |
|
| இருந்து
ஒளிர் அருந் தேன் இலதால்; நீரும், |
50
|
| 'நின்
புனம் அல்ல' என்று என் புலம் வெளிப்பட |
|
| அறைதல்
வேண்டும்: அப் புனம் நீரேல், |
|
| முன்னம்
கண்டவன் அன்று என்று |
|
| உன்னா,
உதவுதல் உயர்ந்தோர் கடனே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
82.
நெஞ்சொடு வருந்தல்
|
|
| |
|
| வடமொழி
மதித்த இசை நூல் வழக்குடன் |
|
| அடுத்தன
எண்-நான்கு அங்குலியகத்தினும், |
|
| நாற்பதிற்று
இரட்டி நால் அங்குலியினும், |
|
| குறுமையும்,
நெடுமையும், கோடல் பெற்று; ஐதாய், |
|
| ஆயிரம்
தந்திரி நிறை பொது விசித்து; |
5
|
| கோடி
மூன்றில் குறித்து; மணி குயிற்றி; |
|
| இரு
நிலம் கிடத்தி; மனம், கரம், கதுவ; |
|
| ஆயிரத்து
எட்டில் அமைத்தன பிறப்பு, |
|
| பிரவிப்
பேதத் துறையது போல, |
|
| ஆரியப்
பதம் கொள் நாரதப் பேரியாழ் |
10
|
| நன்னர்
கொள் அன்பால் நனிமிகப் புலம்ப-- |
|
| முந்
நான்கு அங்குலி முழு உடல் சுற்றும், |
|
| ஐம்பதிற்று
இரட்டி ஆறுடன் கழித்த |
|
| அங்குலி
நெடுமையும் அமைத்து, உள் தூர்ந்தே, |
|
| ஒன்பது
தந்திரி உறுத்தி, நிலை நீக்கி, |
15
|
| அறுவாய்க்கு
ஆயிரண்டு அணைத்து வரை கட்டி, |
|
| தோள்
கால் வதிந்து, தொழில்படத் தோன்றும் |
|
| தும்புருக்
கருவியும் துள்ளி நின்று இசைப்ப-- |
|
| எழு
என உடம்பு பெற்று, எண்பது அங்குலியின், |
|
| தந்திரி
நூறு தழங்கு மதி முகத்த |
20
|
| கீசகப்
பேரியாழ் கிளையுடன் முரல-- |
|
| நிறைமதி
வட்டத்து முயல் உரி விசித்து, |
|
| நாப்பண்
ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து, |
|
| அந்
நரம்பு இருபத்தாறு அங்குலி பெற |
|
| இடக்
கரம் துவக்கி, இடக்கீழ் அமைத்து, |
25
|
| புற
விரல் மூன்றின், நுனிவிரலகத்தும், |
|
| அறுபத்திரண்டு
இசை அனைத்து உயிர் வணக்கும் |
|
| மருத்துவப்
பெயர் பெறும் வானக் கருவி, |
|
| தூங்கலும்,
துள்ளலும், துவக்கி நின்று இசைப்ப-- |
|
| நான்முகன்
முதலா மூவரும் போற்ற, |
30
|
| முனிவர்
அஞ்சலியுடன் முகமன் இயம்ப, |
|
| தேவர்கள்
அனைவரும் திசைதிசை இறைஞ்ச, |
|
| இன்பப்
பசுங்கொடி இடப்பால் படர, |
|
| வெள்ளிஅம்
குன்றம் விளங்க வீற்றிருந்த-- |
|
| முன்னவன்
கூடல் முறைவணங்கார் என, |
35
|
| அரவப்
பசுந் தலை, அரும்பு அவிழ் கணைக் கால், |
|
| நெய்தற்
பாசடை நெடுங் காட்டு ஒளிக்கும் |
|
| கண்
எனக் குறித்த கருங் கயல் கணத்தை, |
|
| வெள்
உடல், கூர்வாய், செந் தாட் குருகினம், |
|
| அரவு
எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள் |
40
|
| கான்று
அலர் கடி மலர் கரந்து உறைந்து, உண்ணும் |
|
| கருங்
கழி கிடந்த கானல்அம் கரைவாய், |
|
| மெய்
படு கடுஞ் சூள் மின் எனத் துறந்தவர் |
|
| சுவல்
உளைக் கவனப் புள் இயல் கலி மான் |
|
| நோக்கம்
மிறைத்த பரிதி கொள் நெடுந் தேர்ப் |
45
|
| பின்னொடும்
சென்ற என் பெரும் பிழை நெஞ்சம், |
|
| சென்றுழிச்சென்றுழிச்
சேறலும் உளவோ? |
|
| அவ்
வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ? |
|
| இடை
வழி நீங்கி என் எதிர் உறுங்கொல்லோ? |
|
| அன்றியும்,
நெடு நாள் அமைந்து உடன் வருமோ? |
50
|
| யாது
என நிலைக்குவன்மாதோ-- |
|
| பேதை
கொள்ளாது ஒழி மனம், கடுத்தே? |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
83.
கண் துயிலாது மொழிதல்
|
|
| |
|
| கடு
வினை அங்குரம் காட்டி, உள் அழுக்காறு |
|
| எண்
திசைச் சாகை கொண்டு, இருள் மனம் பொதுளி, |
|
| கொடுங்
கொலை வடுத்து, கடும் பழிச் சடை அலைந்து, |
|
| இரண்டு
ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம் |
|
| சுற்றுடல்
பெற்று, துணைப் பதினாயிரம் |
5
|
| மற்று
அதின் நீண்டு மணி உடல் போகி, |
|
| ஐம்பது-நூறுடன்
அகன்று சுற்று ஒழுக்கி, |
|
| பெருங்
கவிழ் இணர் தந்து அவை கீழ்க் குலவிய |
|
| அடல்
மாக் கொன்ற நெடு வேற் குளவன், |
|
| குன்றவர்
வள்ளிஅம் கொடியொடு துவக்கிப் |
10
|
| பன்னிரு
கண் விரித்து, என் வினை துரக்கும் |
|
| அருட்
பரங்குன்றம் உடுத்து அணி கூடல் |
|
| குறும்
பிறை முடித்த நெடுஞ் சடை ஒருத்தனைத் |
|
| தெய்வம்
கொள்ளார் சிந்தை-அது என்னக் |
|
| கிடந்த
வல் இரவில், கிளர்மழை கான்ற |
15
|
| அவலும்,
உம்பரும், அடக்குபுனல் ஒருவி, |
|
| தே
அருள் கல்லார் சிந்தையின் புரண்ட |
|
| கவலையும்
காற் குறி கண்டு, பொழில் துள்ளும் |
|
| இமையாச்
சூரும் பல கண்டு, ஒருங்காத் |
|
| துடியின்
கண்ணும் துஞ்சாக் கண்ணினர் |
20
|
| கடியும்
துனைவில் கையகன்று, எரிமணித் |
|
| தொகை
இருள் கொல்லும் முன்றில் பக்கத்து, |
|
| இணை
முகப் பறை அறை கடிப்புடைத் தோகை |
|
| வயிற்றுள்
அடக்கி வளை கிடை கிடக்கும், |
|
| முழக்கி
மெய் கவரும் முகக் கொலை ஞாளி |
25
|
| அதிர்
குரைப்பு அடக்கி, இற்புறத்து அணைந்த நம் |
|
| பூம்
புனல் ஊரனை, பொருந்தா நெடுங் கண் |
|
| அன்னையின்
போக்கிய அரும் பெருந் தவறு-- |
|
| மாலையும்
கண்ணும் மேனியும் உள்ளமும் |
|
| மயங்காத்
தேவர், மருந்து வாய்மடுக்க |
30
|
| முகம்
கவிழ் வேலையில், அறம் குடிபோகிய |
|
| மாய
வல் அரக்கர், தட்டிக் |
|
| காய்
பார் உகுத்த விதி ஒத்தனவே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
84.
தலைவன் வரவு உரைத்தல்
|
|
|
|
|
| நாற்
கடல் வளைத்த நானிலத்து உயிரினை, |
|
| ஐந்தருக்
கடவுள், அவன் புலத்தினரை, |
|
| நடந்து
புக்கு உண்டும், பறந்து புக்கு அயின்றும், |
|
| முத்
தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும், |
|
| நோன்
தலைக் கொடுஞ் சூர்க் களவு உயிர் நுகர்ந்த |
5
|
| தழல்
வேற் குமரன் சால் பரங்குன்றம், |
|
| மணியொடும்
பொன்னொடும் மார்பு அணி அணைத்த |
|
| பெருந்
திருக் கூடல் அருந் தவர் பெருமான் |
|
| இரு
சரண் அகலா ஒருமையர் உளம் என-- |
|
| சுடர்
விளக்கு எடுமின்! கோதைகள் தூக்குமின்! |
10
|
| பூவும்
பொரியும் தூவுமின்! தொழுமின்! |
|
| சுண்ணமும்
தாதும் துனைத்துகள் தூற்றுமின்!-- |
|
| கரும்
பெயல் குளிறினம் களி மயில் என்னக் |
|
| கிடந்து
அயர்வாட்கு, முன் கிளர்வினைச் சென்றோர் |
|
| உடல்
உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த, |
15
|
| முல்லைஅம்
படர் கொடி நீங்கி, பிடவச் |
|
| சொரி
அலர் தள்ளி, துணர்ப் பொலம் கடுக்கைக் |
|
| கிடைதரவு
ஒருவி, களவு அலர் கிடத்தி, |
|
| பூவைஅம்
புடைமலர் போக்கி, அரக்கு அடுத்துக் |
|
| கழுவிய
திரு மணி கால் பெற்றென்ன, |
20
|
| நற்
பெருந் தூது காட்டும் |
|
| அற்புதக்
கோபத் திருவரவு-அதற்கே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
85.
இரங்கல்
|
|
| |
|
| பழுது
அறு தெய்வம் காட்டிப் பண்டையின் |
|
| உழுவலின்
நலத்தால் ஓர் உயிர் என்றும், |
|
| கடஞ்
சூள் தந்தும், கைபுனை புனைந்தும் |
|
| பூழிஅம்
போனகம் பொதுவுடன் உண்டும், |
|
| குழமகற்
குறித்தும், சில மொழி கொடுத்தும், |
5
|
| கையுறை
சுமந்தும், கடித் தழை தாங்கியும், |
|
| உயிரினில்
தள்ளா இரங்கியும், உணங்கியும், |
|
| பனையும்,
கிழியும் படைக்குவன் என்றும், |
|
| இறடிஅம்
சேவற்கு எறி கவண் கூட்டியும், |
|
| புனமும்
எம் உயிரும் படர் கரி தடிந்தும், |
10
|
| அழுங்குறு
புனல் எடுத்து அகிற் புகை ஊட்டியும், |
|
| ஒளி
மணி ஊசல் பரிய விட்டு யாத்தும், |
|
| இரவினில்
தங்க எளிவரல் இரந்தும், |
|
| இருவிஅம்
புனத்திடை எறி உயிர்ப்பு எறிந்தும், |
|
| தெரித்து
அலர் கொய்தும், பொழில் குறி வினவியும், |
15
|
| உடலொடும்
பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி, |
|
| செறிஇருட்
குழம்பகம் சென்று, பளிங்கு எடுத்த |
|
| இற்
பொழில் கிடைக்கும் அளவும் நின்று அலைந்தும், |
|
| பல
நாள் பல் நெறி அழுங்கினர்: இன்று, |
|
| (முகன்
ஐந்து மணத்த முழவம் துவைக்க |
20
|
| ஒரு
கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து, |
|
| மூஉடல்
அணைத்த மும் முகத்து ஓர் முகத்து |
|
| எண்
கடிப்பு விசித்த கல்லலகு எறிய, |
|
| இருட்
குறள் ஊன்றி, எம் அருட்களி ஆற்றி, |
|
| உருள்
வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க, |
25
|
| கரம்,
கால், காட்டி, தலையம் இயக்கி, |
|
| இதழ்
அவிழ் தாமரை எனும் தகுணிச்சம் |
|
| துவைப்ப,
நீள் கரத்துக் கவைகள் தோற்றி, |
|
| கரிக்
கால் அன்ன மொந்தை கலித்து இரங்க, |
|
| துடி
எறிந்து இசைப்ப, துகளம் பரப்பி, |
30
|
| வள்ளம்
பிணைத்த செங் கரடிகை மலக்க, |
|
| எரியகல்
ஏந்தி, வெம் புயங்கம் மிசை ஆக்கி, |
|
| எரி
தளிர்த்தன்ன வேணியில் குழவிப் |
|
| பசும்
பிறை அமுதொடு நிரம்பியதென்ன |
|
| மதுக்
குளிர் மத்தமும் மிலைத்து, ஒரு மறு பிறை |
35
|
| மார்பமும்
இருத்தியதென்னக் கூன் புறத்து |
|
| ஏனக்கோடு
வெண் பொடிப் புறத்து ஒளிர, |
|
| பொலன்
மிளிர் மன்றப் பொதுவகம் நாடித் |
|
| தனிக்கொடி
காண, எவ்விடத்து உயிர் தழைப்ப, |
|
| ஆடிய
பெருமான் அமர்ந்து நிறை கூடல் |
40
|
| கனவிலும்
வினவாதவரினும் நீங்கி, |
|
| சூளும்
வாய்மையும் தோற்றி,) |
|
| நீளவும்
பொய்த்தற்கு அவர் மனம் கரியே! |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
86.
ஐயம் உற்று ஓதல்
|
|
| |
|
| பாசடைக்
கருங் கழி படர் மணல் உலகமும் |
|
| எழு
மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி |
|
| வரை
உலகு அனைத்தும் வருவது போல, |
|
| திரை
நிரை திரைத்துக் கரை கரைக் கொல்லும் |
|
| வையை
நீர் விழவு புகுந்தனம் என ஒரு |
5
|
| பொய்யினள்
அன்றி மெய்யினை நீயும்; |
|
| பொலம்பூண்
பெயர்ந்து உறை பூணை; அருள்தரும் |
|
| மலர்ச்சி
நீங்கிக் கொடுங்கோல் வேந்து எனச் |
|
| சேக்கொள்
கண்ணை; செம்மொழிப் பெயர்தந்து |
|
| ஒன்றுடன்
நில்லா மொழியை; மதுத்த |
10
|
| முதிரா
நாள் செய் முண்டகம் மலர்ந்து |
|
| கவிழ்ந்த
முகத்தை; எம் கண் மனம் தோன்ற |
|
| அரும்பிய
நகையை அன்றே? நின் கெழு |
|
| என்கண்
கண்ட இவ் இடை, என் உளம் |
|
| மன்னி
நின்று அடங்காக் குடுமிஅம் பெருந்தழல் |
15
|
| பசுங்
கடல் வளைந்து பருகக் கொதித்த |
|
| தோற்றமும்
கடந்தது என்றால், (ஆற்றல் செய் |
|
| விண்ணகம்
புடைத்து, நெடு வரை கரக்கும் |
|
| கொடுஞ்
சூர்க் கொன்ற கூர் இலை நெடு வேல் |
|
| குன்றக்
குறவர் கொம்பினுக்கு இனியோன், |
20
|
| குருகு
ஒலி ஓவாப் பனி மலர் வாவி |
|
| வயிறு
வாய்த்த குழவிஅம் கிழவோன், |
|
| வாழ்
பரங்குன்று எனும், மணி அணி பூண்ட |
|
| நான்மறை
புகழும் கூடல் எம்பெருமான் |
|
| வான்முதல்
ஈன்ற மலைகள்தன்னொடும், |
25
|
| முழுது
உணர் ஞானம், எல்லாம் உடைமை, |
|
| முழுது
அனுக்கிரகம், கெழு பரம், அநாதி, |
|
| பாசம்
இலாமை, மாசு அறு நிட்களம், |
|
| அவிகாரக்
குறி, ஆகிய தன் குணம் |
|
| எட்டும்
தரித்து; விட்டு, அறு குற்றமும்; |
30
|
| அருச்சனை,
வணக்கம், பர உயிர்க்கு அன்பு அகம், |
|
| பேர்
அருள் திரு நூல், பெருந் துறவு, எங்கும் |
|
| நிறை
பொருள் அழுந்தல், அருளினர்க் கூட்டம், |
|
| இருள்
பவம் நடுங்கல், எனும் குணம் எட்டும், |
|
| தமக்கும்
படைத்த விதிப் பேற்று அடியவர் |
35
|
| நிலை
அருள் கற்பு என,) நெடுங் கற்பு உடையோள் |
|
| முன்
உறின், அவள் மனம் ஆங்கே |
|
| நன்னரில்
கொண்டு குளிரும் பெறுமே? |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
87.
தலைவனோடு ஊடல்
|
|
| |
|
| மாயமும்
இன்பும் மருட்சியும் தெருட்சியும் |
|
| நகைத்தொகை
கூட்டிக் கவைத்து எழு சொல்லும், |
|
| அமுதமும்
கடுவும் விழியில் வைத்து அளிக்கும் |
|
| இருமனப்
பொய் உளத்து ஒரு மகள்தன்னை |
|
| கரியோன்
கடுப்பத் துகில் கவர்ந்து, ஒளிர்அலர் |
5
|
| விதியினும்
பன்மை செய்முகன் படைத்து, அளவாச் |
|
| சோதியின்
படைக்கண் செல உய்த்து, அரும்புசெய் |
|
| முண்டக
முலையில் சாந்து அழித்து, அமைத் தோள் |
|
| எழுதிய
கழைக் கரும்பு எறிந்து, நூல் வளர்த்த |
|
| கோதை
வகை பரிந்து, மணிக்கலன் கொண்டு, |
10
|
| கழைத்
தோள் நெகிழத் தழை உடல் குழையத் |
|
| திரையினைத்
தள்ளி, மலர்த்துகில் கண் புதைத்து, |
|
| ஒள் நிற
வேங்கையின் தாதும் பொன்னும் |
|
| சுண்ணம்-அவை
கலந்து திமிர்ந்து உடல் தூற்றி, |
|
| வண்டொடு
மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி, |
15
|
| இறால்
புணர் புதுத் தேன் ஈத்து, உடன் புணரும் |
|
| அவ்வயின்,
மறித்தும் அன்னவள்தன்னுடன் |
|
| கெழுமிய
விழவுள், புகுமதி நீயே-- |
|
| (கவை
நாக் கட்செவி அணந்து இரை துய்த்த |
|
| பாசுடற்
பகுவாய்ப் பீழைஅம் தவளையும், |
20
|
| பேழ்வாய்த்
தழல்விழித் தரக்கு அடித்து அவிந்த |
|
| நிலம்
படர் தோகைக் குலம் கொள் சேதாவும், |
|
| அவ்வுழி
மாத்திரை அரை எழு காலை, |
|
| திரு நுதற்கண்ணும்
மட மகள் பக்கமும் |
|
| எரி மழு
நவ்வியும், பெறும் அருள் திரு உருவு |
25
|
| எடுத்து,
உடன் அந்தக் கடுக் கொலை அரவினை, |
|
| தீவாய்ப்
புலியினை, திருந்தலர் நகைப்ப |
|
| எடுத்து
அணிபூண, உரித்து உடை உடுப்ப, |
|
| முனிவரும்
தேவரும் கரமலர் முகிழ்ப்ப, |
|
| தருவன
அன்றி--மலரவன்-அவன் தொழில், |
30
|
| நாரணன்
ஆங்கு-அவன் கூருடைக் காவல், |
|
| சேரத்
துடைக்கும் பேர் அருள் நாளினும், |
|
| முத் தொழில்
தனது முதல் தொழில் ஆக்கி, |
|
| ஒரு தாள்
தாரைகொள் முக் கவைச் சுடர் வேல்- |
|
| தலை இருந்து,
அருங்கதி முழுது நின்று அளிக்கும் |
35
|
| திரு நகர்க்
காசிப் பதியகத்து, என்றும் |
|
| வெளியுறத்
தோன்றிய இருள் மணி மிடற்றோன்) |
|
| நேமியங்குன்று
அகழ் நெடு வேற் காளையன்- |
|
| தன் பரங்குன்றம்
தமர் பெறு கூடற்கு |
|
| இறையோன்
திருவடி நிறையுடன் வணங்கும் |
40
|
| பெரும்
புனல் ஊர! எம் இல் |
|
| அரும்
புனல் வையைஅம் புது நீர் அன்றே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
88.
உடன்பட உரைத்தல்
|
|
| |
|
| வேலிஅம்
குறுஞ் சூல் விளைகாய்ப் பஞ்சினம் |
|
| பெரு
வெள்ளிடையில் சிறுகால் பட்டென, |
|
| நிறை
நாண் வேலி நீங்கி, தமியே |
|
| ஓர்
உழி நில்லாது, அலமரல் கொள்ளும் என் |
|
| அருந்
துணை நெஞ்சிற்கு உறும் பயன் கேண்மதி: |
5
|
| மண்ணுளர்
வணங்கும் தன்னுடைத் தகைமையும், |
|
| இருள்
அறு புலனும், மெய்ப்பொருள் அறி கல்வியும், |
|
| அமரர்
பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு |
|
| குறுஞ்
சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் |
|
| விதலை
உள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும், |
10
|
| நின்
நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் |
|
| துவருறத்
தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன், |
|
| 'பொம்மல்அம்
கதிர் முலை புணர்வுறும்கொல்?' எனச் |
|
| சென்றுசென்று
இரங்கலை; அன்றியும், தவிர்மோ-- |
|
| (நெட்டுகிர்க்
கருங் கால் தோல்முலைப் பெரும் பேய் |
15
|
| அமர்
பெற்று ஒன்னலர் அறிவுறப் படர, |
|
| பேழ்வாய்
இடாகினி கால் தொழுது ஏத்திக் |
|
| கையடை
கொடுத்த வெள் நிண வாய்க் குழவி, |
|
| ஈமப்
பெரு விளக்கு எடுப்ப, மற்று-அதன் |
|
| சுடு
பொடிக் காப்பு உடல் துளங்க, சுரிகுரல் |
20
|
| ஆந்தையும்
கூகையும் அணி ஓலுறுத்த, |
|
| ஓரி
பாட்டு எடுப்ப, உவணமும் கொடியும் |
|
| செஞ்
செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும் |
|
| இட்ட
செய்பந்தர் இடைஇடை கால் என, |
|
| பட்டு
உலர் கள்ளிஅம்பால், துயில் கொள்ளும் |
25
|
| சுள்ளிஅம்
கானிடை, சுரர் தொழுது ஏத்த-- |
|
| மரகதத்
துழாயும், அந் நிறக் கிளியும், |
|
| தோகையும்,
சூலமும்; தோளில், முன்கையில், |
|
| மருங்கில்,
கரத்தில், வாடாது இருத்தி, |
|
| போர்
வலி அவுணர் புகப் பொருது உடற்றிய |
30
|
| முக்
கண், பிறை எயிற்று, எண் தோட் செல்வி, |
|
| கண்டு
உளம் களிப்ப--கனைகழல் தாமரை |
|
| வானக-வாவியூடு
உற மலர, |
|
| ஒரு
தாள் எழு புவி உருவ, திண் தோள் |
|
| பத்துத்
திசையுள் எட்டு அவை உடைப்ப-- |
35
|
| ஒரு
நடம் குலவிய திருவடி உரவோன்) |
|
| கூடல்அம்
பதியகம் போற்றி |
|
| நீட
நின்று எண்ணார் உளம் என நீயே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
89.
பாணனொடு வெகுளுதல்
|
|
| |
|
| உளம்
நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை, |
|
| குவளை
வடி பூத்த கண் தவள வாள் நகைக் |
|
| குறுந்
தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ! |
|
| கவிர்
அலர் பூத்த செஞ் செம்மை வில் குடுமி, |
|
| மஞ்சு
அடை கிளைத்த வரிக் குறு முள்-தாள் |
5
|
| கூர்அரிவாளின்,
தோகைஅம் சேவற் |
|
| கொடியோன்
குன்றம் புடைவளர் கூடல், |
|
| கணிச்சி
அம் கைத்தலத்து அருட் பெருங் காரணன், |
|
| உலகு
உயிர் மகவுடைப் பசுங் கொடிக்கு ஒருபால் |
|
| பகுத்து,
உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய்த் துறவினன், |
10
|
| முளரி
நீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்-துணை |
|
| மணி
முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின், |
|
| வளர்
மறித் தகர் எனத் திரிதரும் பாண்மகன் |
|
| எனக்
குறித்து அறிகிலம் யாமே: எமது |
|
| மணி
ஒளிர் முன்றில் ஒரு புடை நிலை நின்று, |
15
|
| அன்ன
ஊரர் புல்லமும், விழுக் குடிக்கு |
|
| அடாஅக்
கிளவியும், படாக் கரும் புகழும், |
|
| எங்கையர்
புலவியில் இகழ்ச்சியும், நம்பால் |
|
| தனது
புன் புகழ் மொழி நீளத் தந்தும், |
|
| ஒன்று
பத்து ஆயிரம் நன்று பெறப் புனைந்து |
20
|
| கட்டிய
பொய் பாப் புனைந்து நிற்கு உறுத்தின்-- |
|
| பேர்
எழிற் சகரர் ஏழ் எனப் பறித்த |
|
| முரிதிரை
வடிக்கும் பரிதிஅம் தோழம் |
|
| காட்டையுள்
இம்பரும் காணத் |
|
| தோட்டி
நின்று அளக்கும் தொன்மை-அது பெறுமே. |
25
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
90.
பாணன் புலந்து உரைத்தல்
|
|
| |
|
| இலவு
அலர் தூற்றி, அனிச்சம் குழைத்து, |
|
| தாமரை
குவித்த காமர் சேவடித் |
|
| திருவினள்
ஒரு நகை அரிதினின் கேண்மோ: |
|
| எல்லாம்
தோற்ற இருந்தன தோற்றமும், |
|
| தன்னுள்
தோன்றித் தான் அதில் தோன்றாத் |
5
|
| தன்னிடை
நிறையும் ஒரு தனிக் கோலத்து, |
|
| ஒரு
வடிவு ஆகிய பழ மறை வேதியன்; |
|
| (நான்மறைத்
தாபதர் முத் தழற்கனல் புக்கு |
|
| அரக்கர்
துய்த்து உடற்றும் அதுவே மான, |
|
| பாசடை
மறைத்து எழு முளரி அம் கயத்துள் |
10
|
| காரான்
இனங்கள் சேடு எறிந்து உழக்கும் |
|
| கூடற்கு
இறையவன்;) காலற் காய்ந்தோன்; |
|
| திரு
நடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை, |
|
| எங்கையர்
குழுமி, "எமக்கும் தங்கையர்ப் |
|
| புணர்த்தினன்
பாண் தொழில் புல்லன்" என்று, இவனை, |
15
|
| கோலின்,
கரத்தின், தோலின், புடைப்ப-- |
|
| கிளை
முள் செறித்த வேலிஅம் படப்பைப் |
|
| படர்
காய்க்கு அணைந்த புன் கூழைஅம் குறு நரி, |
|
| உடையோர்
திமிர்ப்ப, வரும் உயிர்ப்பு ஒடுக்கி |
|
| உயிர்
பிரிவுற்றமை காட்டி, அவர் நீங்க |
20
|
| ஓட்டம்
கொண்டன கடுக்கும்-- |
|
| நாட்டவர்
தடைய, மற்று, உதிர்த்து நடந்ததுவே! |
|
|
|
உரை
|
| |
|
|