91-100
 
91. தோழிக்கு உரைத்தல்
 
   
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழற்கு  
ஆற்றாது அலந்து, காற்று எனக் கொட்புற்று,  
உடைதிரை அருவி ஒளி மணி காலும்  
சேயோன் குன்றகத் திருப் பெறு கூடல்,  
கொடுஞ் சுடர் கிளைத்த நெடுஞ் சடைப் புயங்கன்
5
பவளம் தழைத்த பதமலர் சுமந்த நம்  
பொருபுனல் ஊரனை, பொது என அமைத்த  
அக் கடிகுடி மனையவர் மனை புகுத்தி,  
அறுவாய் நிறைந்த மதிப்புறந்தோ என,  
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து,
10
அளிக் கார்ப் பாடும் குரல் நீர் வறந்த  
மலைப் புள் போல நிலைக் குரல் அணந்து, ஆங்கு,  
உணவு உளம் கருதி ஒளி இசை பாட,  
முள்-தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து  
ஒரு பால் அணைந்த இவ் விரிமதிப் பாணற்கு,
15
அடுத்தன உதவுழி வேண்டும்--  
கடுத் திகழ் கண்ணி! அக் கல்லை இக் கணமே.
உரை
   
92. பாங்கி அன்னத்தோடு அழுங்கல்
 
   
வெறி மறி மடைக்குரல் தோல் காய்த்தென்ன  
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்  
பொய் வழிக் கதியகம் மெய் எனப் புகாத  
விழியுடைத் தொண்டர்-குழு முடி தேய்ப்ப,  
தளிர்த்துச் சிவந்த தண்டைஅம் துணைத் தாள்
5
சேயோன் பரங்குன்று, இழை எனச் செறித்து,  
தமிழ்க்கலை மாலை சூடி, தாவாப்  
புகழ்க்கலை உடுத்து, புண்ணியக் கணவர்  
பல் நெறிவளனின் பூட்சியின் புல்லும்  
தொல் நிலைக் கூடல், துடிக் கரத்து ஒருவனை,
10
அன்பு உளத்து அடக்கி, இன்பம் உண்ணார் என,  
சேவல் மண்டலித்துச் சினை அடைகிடக்கும்  
கைதை வெண் குருகு எழ மொய்திரை உகளும்  
உளைகடற் சேர்ப்பர், அளி விடத் தணப்ப,  
நீலமும், கருங் கொடி அடம்பும், சங்கமும்;
15
கண்ணிற்கு, இடையில், களத்தில், கழிதந்து  
அலர்ந்தும், உலர்ந்தும், உடைந்தும், அனுங்கலின்,  
வட்குடை மையல் அகற்றி, இன்பு ஒரு கால்  
கூறவும் பெறுமே! ஆறு-அது நிற்க--  
இவள் நடைபெற்றும், இவட் பயின்று இரங்கியும்,
20
ஓர்உழி வளர்ந்த நீர இவ் அன்னம்  
அன்று என, தடையாக் கேண்மை  
குன்றும், அச் சூளினர் தம்மினும் கொடிதே!  
உரை
   
93. இரவு இடை விலக்கல்
 
   
முதுக் குறிப் பெண்டிர் வரத்து இயல் குறிப்ப,  
வழி முதல் தெய்வதம் வரைந்து, மற்று-அதற்குப்  
பருக்காடு உறுத்திப் பலி முதல் பராவ,  
கிள்ளை அவ் அயலினர் நா உடன்று ஏத்தப்  
பக்கம் சூழுநர்: குரங்கம், மண் படப்
5
பெற்று உயிர்த்து அயரும் பொற்றொடி மடந்தைதன்  
குரு மணி ஓவியத் திரு நகர்ப் புறத்தும்,  
கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த  
இருளுடைப் பெரு முகில் வழி தெரிந்து ஏகன்மின்--  
(அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த
10
புடை மனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்,  
அத் தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு,  
ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசு இருந்து,  
ஊடு உகள் சிரலைப் பச்சிற அருந்தும்  
பழனக் குருநாடு அணி பதி தோற்று,
15
முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்,  
கண்டீரவத்தொடு கறையடி வளரும்  
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்,  
அனைத்துள வஞ்சமும் அழித்து, நிரை மீட்சி  
முடித்து, தமது முடியாப் பதி புக,
20
'ஊழ் முறையே எமக்கு உள மண் கருதிச்  
சேறி' என்று இசைப்ப, செல் பணித் தூதினர்க்கு  
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன்)  
பாடல் சான்ற தெய்வக்  
கூடல் கூடார் குணம் குறித்து எனவே.
25
உரை
   
94. பருவம் குறித்தல்
 
   
அளிகள் பாட்டு எடுப்ப, புறவு பாட்டு ஒடுங்க,
காந்தள், அம் கடுக்க, கனல், தனம், மலர,
கோடல் ஈன்று கொழு முன கூம்ப,
பிடவமும் களவும் ஒரு சிற பூப்ப,
வான்புறம் பூத்த மீன் பூ மறய,
5
கோபம் ஊர்தர மணி நிர கிடப்ப,
தென்கால் திகப்ப, வடகால் வளர,
பொறி விழிப் பாந்தள் புற்று அள வதிய,
வரி உடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப,
இடிக்குரல் ஆன்-ஏற்றினம் எதிர் செறுப்ப,
10
பொறிக் குறி மட மான் சுழித்தலக் கவிழ,
முட உடல் அண்டர் படலிடம் புகுத,
கோவியர் அளயுடன் குலனொடு குளிர்ப்ப,
காயாக் கண்கொள, முல்ல எயிறு உற,
முசுக்கல பிணவுடன் முழயுற அடங்க,
15
கண மயில் நடன் எழ, காளி கூத் ஒடுங்க,
சாதகம் முரல் குரல் வாய்மட திறப்ப,
மாக் குயில் மாழ்கிக் கூக்குரல் அடப்ப,
பனிக் கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப,
உட நறவு உண்டு வருட வெறுப்ப,
20
அகில் சுடு பெரும் புனம் உழுபதன் காட்ட,
வெறி விழச் சவரர் மா அடி ஒற்ற,
மணந் உடன்போக்கினர்க்கு உயங்கு வழி மறுப்ப,
புலிக் குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப,
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க,
25
இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர,
குமரியர் காமமும் கூவலும் வெப்புற,
நிலமகள் உடலமும் திசகளும் குளிர,
ஒலி கடல் இப்பி தரளம் சூல் கொள,
இவ முதல் மணக்க எழுந்த கார் கண்ட,
30
வறுநீர் மலர் என மாழ்கல; விடு மதி--
(மற அடி வருத்திய மறவனத், ஒரு நாள்,
மணிச் சுடர் நறு நெய் கவர் மதிக் கருப்பக்கு,
இரு வக-ஏழ் எனும் திரு உலகு அனத்ம்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல,)
35
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர,
பாசற சென்ற நாள் நிலம் குழிய
எண்ணி, விரல் தேய்ந்த செங் கரம் கூப்புக--
கொய்தளிர் அன்ன மேனி
40
மொய் இழ பூத்த கவின் மலர்க் கொடியே!  
உரை
   
95. பரத்தையிற் பிரிவு உரைத்தல்
 
   
பெரு நிலத் தேவர்கள் மறை நீர் உகுப்ப,  
மற்று-அவர் மகத்துள், வளர்அவி மாந்த,  
விடையோன் அருச்சனைக்கு உரிமையின், முன்னவன்,  
அன்னவன் தன்னுடன் கடிகை ஏழ் அமர,  
அன்றியும், இமையவர் கண் எனக் காட்ட,
5
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க,  
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ,  
உடல் முனி செருவினர் உடல்வழி நடப்ப,  
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற,  
தண் மதிக் கலைகள் தான் அற ஒடுங்க,
10
எறிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய,  
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப,  
அவன் தரும் உலகத்து அருந் தொழில் ஓங்க,  
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற  
ஒருகால்-தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த
15
செங்கதிர் விரித்த செந் திரு மலர்த் தாமரைப்  
பெருந் தேன் அருந்தி, எப் பேர் இசை அனைத்தினும்  
முதல் இசைச் செவ்வழி விதிபெறப் பாடி, அத்  
தாது உடல் துதைந்த மென் தழைச் சிறை வண்டினம்,  
பசுந் தாள் புல் இதழ்க் கருந் தாள் ஆம்பல்,
20
சிறிது, உவா, மதுவமும் குறை பெற அருந்தி, அப்  
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை  
மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர!  
(தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப,  
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி,
25
முனி தழற் செல்வம் முற்றி, பழங் கல்  
பெண் வர, சனகன் மிதிலையில் கொடுமரம்  
இறுத்து, அவன் மகட் புணர்ந்து, எரிமழு இராமன்  
வில் கவர்ந்து, அன்னை வினை உள் வைத்து ஏவ,  
துணையும் இளவலும் தொடரக் கான் படர்ந்து,
30
மா குகன் நதி விட ஊக்கி, வனத்துக்  
கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து,  
இரு சிறைக் கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து,  
எறிவளி மகனை நட்டு, ஏழு மரத்தினுக்கு,  
அரிக்கு, கருங் கடற்கு, ஒரோஒரு கணை விடுத்து,
35
அக் கடல் வயிறு அடைத்து, அரக்கன் உயிர் வௌவி,)  
இலங்கை அவ் அரக்கற்கு இளையோன் பெறுக எனத்  
தமது ஊர் புகுந்து முடிசுமந்தோர்க்கும்;  
நான்முகத்தவர்க்கும்; இரு பால் பகுத்த  
ஒரு நுதற்கண்ணவன் உறைதரு கூடல்
40
தெளி வேற் கண் குறுந்தொடியினர் காணின்--  
நின்பால் அளியமும் நீங்கி,  
இன்பும், இன்று ஒழிக்கும்; எம் கால் தொடல்; சென்மே.
உரை
   
96. நெறி விலக்கிக் கூறல்
 
   
வனப்புட அனிச்சம் புக மூழ்கிய என,
இவ் அணங்கு, அவ் அதர்ப் பேய்த்தேர்க்கு இடந்தனள்;
தென் திசக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறயடிச் சென்னியின் நக நுதி போக்கி,
குருத் அயில் பேழ்வாய்ப் பல் படச் சீயம்
5
அதர்தொறும் குழுவும்; அவற்றினும் மற்று-அவன்
கடுங் கால் கொற்றத் அடும் தூவர் எனத்
தனி பார்த் உழலும் கிராதரும் பலரே;
ஒரு கால் இரதத் எழு பரி பூட்டி
இரு வான் போகிய எரிசுடர்க் கடவுள்,
10
'மாதவர் ஆம்' என, மேல்மல மறந்தனன்;
மின் பொலி வேலோய்! (அன்பினர்க்கு அருளும்
கூடற் பதி வரும் ஆடற் பரியோன்,
எட்டு-எட்டு இயற்றிய கட்டு அமர் சடயோன்
இரு சரண் அடந்த மறுவிலர் போல)
15
அருளுடன் தமிய ஆடின ஐய!
தண்ணீர் வாய்த் தரும் செந் நிறச் சிதல
அதவு உதிர் அரிசி அன்ன செந் தின
நுண் பதம், தண் தேன், விளங்கனி, முயல்-தச,
வெறிக் கண் கவஅடிக் கடுங் கால் மேதி
20
அன்புமகப் பிழத்க் கல்லறப் பொழிந்த
வறள்பால், இன்ன எம்முழ உள அயின்று,
கார் உடல் அனுங்கிய பங் கண் கறயடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடு மர அதள் வேய் சில் இடக் குரம்பயில்,
25
மற்று-அதன் தோலில் உற்று, இருவீரும்
கண்படுத், இரவி கீறுமுன்
எண்பட நும் பதி ஏகுதல் கடனே!
 
உரை
   
97. ஆறு பார்த் உற்ற அச்சக் கிளவி
 
   
வெறிக் குறுங் கப்பின் வெள் எயிற்று எயிற்றியர்,
செம் மணி சுழற்றித் தேன் இலக்கு எறிதர,
பெருக்கெடுத் இழிதரும் வெள்ளப் பிரசக்
கான் யாறு உந்ம் கல்வர நாட!
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன்
5
சிறி இடத் தெருள்வம் உடன்உடன் மருள்வம்
ஆம் எனக் காட்டும் அணி இருள் மின்னலின்,
நிணம் புணர் புகர் வேல் இணங்கு ணயாக,
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர்
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ்
10
கொள்ளி வாய்க் குணங்கு, உள்ளுதோறு இவறிய
மின்மினி உமிழும் ன் அலர் கள்ளிய,
'அன்ன!' என்று அணதரும் அர இருள் யாமத்--
கடுஞ் சுடர் இரவி விடும் கதிர்த் தேரின,
மூல நிசாசரர், மேல் நிலம் புடத்,
15
ணக் கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில் சூழ்
கூடல்-பதி வரும்) குணப் பெருங் குன்றினன்
தாமர பழித்த இரு சரண் அடயாக்
கோளினர் போலக் குறி பல குறித்தே,
ஐந் அமர் கப்பினள் அமத்தோள் நசஇ,
20
தருவின் கிழவன் தான் என நிற்றி,
நின் உயிர்க்கு இன்னல் நேர்தர, திருவின்-
தன் உயிர்க்கு இன்னல் தவறு இல: ஆ! ஆ!
இரண்டு உயிர் தணப்பு என என கண் புணர, இக்
கொடு வழி, இவ் வரவு, என்றும்
25
விடுவ நெடும் புகழ் அடுவேலோயே!  
உரை
   
98. மெலிவு கண்டு செவிலி கூறல்
 
   
கதிர் நிரை பரப்பும் மணி முடித் தேவர்கள்  
கனவிலும் காணாப் புனைவு அருந் திருவடி  
மா நிலம் தோய்ந்து ஓர் வணிகன் ஆகி,  
எழுகதிர் விரிக்கும் திரு மணி எடுத்து--  
வரையாக் கற்புடன் நான்கு எனப் பெயர் பெற்று,
5
ஆங்குஆங்கு, ஆயிர கோடி சாகைகள்  
மிடலொடு விரித்து, சருக்கம், பாழி,  
வீயா அந்தம் பதம், நிரை நாதம்,  
மறைப்பு, புள்ளி, மந்திரம், ஒடுக்கம், என்று  
இனையவை விரித்துப் பல பொருள் கூறும்--
10
வேதம் முளைத்த ஏதம் இல் வாக்கால்  
குடுமிச் சேகரச் சமன் ஒளி சூழ்ந்த  
நிறை மதி நான்கின் நிகழ்ந்தன குறியும்;  
குருவிந்தம், சௌகந்தி, கோவாங்கு,  
சாதரங்கம், எனும் சாதிகள் நான்கும்;
15
தேக்கின், நெருப்பின், சேர்க்கின், அங்கையின்,  
தூக்கின், தகட்டின், சுடர்வாய் வெயிலின்,  
குச்சையின், மத்தகக் குறியின், ஓரத்தின்,  
நெய்த்துப் பார்வையின், நேர்ந்து சிவந்து, ஆங்கு,  
ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும்;
20
கருகி நொய்து ஆதல், காற்று, வெகுளி,  
திருகல், முரணே, செம்மண், இறுகல்,  
மத்தகக் குழிவு, காசம், இலைச்சுமி,  
எச்சம், பொரிவு, புகைதல், புடாயம்,  
சந்தை, நெய்ப்பு இலி, எனத் தரு பதினாறு
25
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்;  
சாதகப்புட் கண், தாமரை, கழுநீர்,  
கோபம், மின்மினி, கொடுங்கதிர், விளக்கு,  
வன்னி, மாதுளம் பூ, விதை, என்னப்  
பன்னு சாதரங்க ஒளிக் குணம் பத்தும்;
30
செம்பஞ்சு, அரத்தம், திலகம், உலோத்திரம்,  
முயலின் சோரி, சிந்துரம், குன்றி,  
கவிர் அலர், என்னக் கவர் நிறம் எட்டும்;  
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்;  
அசோகப் பல்லவம், அலரி, செம்பஞ்சு,
35
கோகிலக் கண், நீடு இலவு அலர், செம்பு, எனத்  
தரு சௌகந்திதன் நிறம் ஆறும்;  
செங்கல், குராமலர், மஞ்சள், கோவை,  
குங்குமம், அஞ்சில் கோவாங்கு, நிறமும்;  
திட்டை, ஏறு, சிவந்த விதாயம்,
40
ஒக்கல், புற்று ஆம் குருதி, தொழுனை,  
மணி, கோகனகம், கற்பம், பாடி,  
மாங்கிசகந்தி, வளர் காஞ்சு, உண்டை, என்று  
ஆங்கு ஒரு பதின் மூன்று அடைந்தன குற்றமும்;  
இவை எனக் கூறிய நிறை அருட் கடவுள்
45
கூடல் கூடா குணத்தினர் போல)  
முன்னையள் அல்லள்! முன்னையள் அல்லள்!  
அமுத வாய்க் கடு விழிக் குறுந் தொடி நெடுங் குழற்  
பெருந் தோட் சிறுநகை முன்னையள் அல்லள்!  
உலகியல் மறந்த கதியினர் போல
50
நம்முள் பார்வையும் வேறு வேறு ஆயின;  
பகழி செய் கம்மியர் உள்ளம் போல  
ஐம் புலக் கேளும் ஒரு வாய்ப் புக்கன;  
அதிர் உவர்க் கொக்கின் களவு உயிர் குடித்த  
புகர் இலை நெடு வேல் அறுமுகக் குளவன்,
55
தகரம் கமழும் நெடு வரைக் காட்சி  
உற்றனள் ஆதல் வேண்டும்,  
சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே!  
உரை
   
99. ஆயத்து உய்த்தல்
 
   
வடவனத்து ஒரு நாள் மாறுபட்டு எதிர்ந்து  
வழி நடம் தனது மரக்கால் அன்றி,  
முதல் தொழில் பதுமன் முன்னாய், அவ் உழி  
மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி,  
தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து,
5
மற்று அதன் தாள் அம்புத்திரி ஆக்கி,  
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி,  
பாணியில் சிரம் பதித்து, ஒரு நடை பதித்து,  
கொடுகொட்டிக்குக் குறி அடுத்து எடுக்கும்  
புங்கம், வாரம், புடைநிலை பொறுத்து,
10
சச்சபுடத்தில், தனி எழு மாத்திரை,  
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி,  
எடுத்துத் துள்ளிய இனமுத்திரைக்கு,  
மங்கலப்பாணி மாத்திரை நான்குடன்  
சென்று எறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி,
15
ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்குப்  
பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி,  
புறக் கால் மடித்து, குறித்து எறி நிலையம்  
பதினான்கு அமைத்து, விடு மாத்திரைக்கு  
வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து,
20
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு  
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து,  
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த  
காலுடன் சுழல ஆடிய காளி  
நாணி நின்று ஒடுங்க, தானும் ஓர் நாடகம்,
25
பாண்டரங்கத்து ஒரு பாடு பெற்று அமைந்த  
மோகப் புயங்க முறைத் துறை தூக்கி,  
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்  
பாணி இரண்டும் தாளம் ஆக்கி,  
ஒரு தாள் மிதித்து, விண் உற விட்ட
30
மறு தாள் மலரில் மலர்க்கரம் துடக்கி,  
பார்ப்பதிப் பாணியைத் துடி மணி எடுப்ப,  
சுருதியைத் தண்டி வலி கொண்டு அமைப்ப,  
முதல் ஏழ்-அதனை ஒன்றினுக்கு ஏழ் என  
வீணை பதித்துத் தானம் தெரிக்க;
35
முன் துடி மணியில் ஒற்றிய பாணியை  
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து,  
மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால்  
முன் ஒரு நாளில் முழுக் கதி அடைந்த  
அம்மைப் பெயர் பெறும் அருட் பேய் பிடிப்ப;
40
பூதமும், கூளியும், பேயும், குனிப்ப;  
அமரர் கண் களிப்ப--ஆடிய பெருமான்  
மதுரைஅம் பதி எனும் ஒரு கொடிமடந்தை  
சீறிதழ்ச் சாதிப் பெரு மணம் போல,  
நின் உளம் நிறைந்த நெடுங் கற்பு-அதனால்
45
வினை உடல் புணர வரும் உயிர் பற்றிப்  
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல,  
காலம் உற்று ஓங்கும் நீள்முகில் கூடி  
மணி தரு தெருவில் கொடி நெடுந் தேரும்,  
நாற் குறிப் புலவர் கூட்டு எழு நனி புகழ்
50
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின  
உருள் எழு பூழியும், அவ் உருள் பூண்ட  
கலின மான் துகளும் கதிர் மறை நிழலின்  
நின்று, முன் இட்ட நிறை அணி பொறுத்து,  
பெருங் குலைக் கயத்துக் கருந் தாட் கழுநீர்
55
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என,  
நின் உயிர் ஆய நாப்பண்  
மன்னுக, வேந்தன் வரவினுக்கு எழுந்தே.
உரை
   
100. தூது கண்டு அழுங்கல்
 
   
வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து  
முகில்-துகில் மூடி மணி நெருப்பு அணைத்துப்  
புனம் எரி கார்-அகில் புகை பல கொள்ளும்  
குளவன் வீற்றிருந்த வளர் புகழ்க் குன்றமும்,  
புதவு தொட்டெனத் தன் புயல் முதிர் கரத்தினை
5
வான் முறை செய்த கூன் மதிக் கோவும்,  
தெய்வம் அமைத்த செழுந் தமிழ்ப் பாடலும்,  
ஐந்தினில் பங்கு செய்து இன்பு வளர் குடியும்,  
தவல் அருஞ் சிறப்பொடு சால்பு செய்து அமைந்த  
முது நகர்க் கூடலுள்--மூவாத் தனி முதல்
10
(ஏழ் இசை முதலில் ஆயிரம் கிளைத்த  
கானம் காட்டும் புள்-அடித்துணையினர்  
பட்டடை எடுத்து, பாலையில் கொளுவி,  
கிளையில் காட்டி, ஐம் முறை கிளத்தி,  
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி,
15
விளரி எடுத்து, மத்திமை விலக்கி,  
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட,  
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி,  
குருவி விண் இசைக்கும் அந்தரக் குலிதம்  
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி,
20
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து,  
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்  
ஆங்கு-அவை நான்கும் அணி உழை ஆக்கி,  
பூரகம், கும்பகம், புடை எழு விளரி,  
துத்தம், தாரம், கைக்கிளை, அதனுக்கு
25
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து,  
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட,  
கூளியும் துள்ள, ஆடிய நாயகன்)  
இணை அடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும்  
திருவறம் வந்த ஒருவன் தூதுகள்,
30
இன்பமும், இயற்கையும், இகழாக் காமமும்,  
அன்பும், சூளும், அளியுறத் தந்து, என்  
நெஞ்சமும், துயிலும், நினைவும், உள்ளமும்,  
நாணமும், கொண்ட நடுவினர்--இன்னும்  
கொள்வதும் உளதோ? கொடுப்பதும் உளதோ?--
35
செய் குறி இனிய ஆயின்:  
கவ்வையின் கூறுவிர், மறைகள் விட்டு எமக்கே.
உரை