த
104 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
பாடல்களால் ‘ திருக்களா
நீழலில் எழுந்தருளிய கடவுளே ’ என்று துதிக்க நாத் தந்தருளிய தலைவனே ! வணக்கம். வானின்கண்
(உலவும்) குளிர்ந்த (பிறைச்) சந்திரனோடு கங்கையும் சேர்ந்த பவளம்போற் செவந்த நீண்ட
சடையை யுடைய மேலோனே ! வணக்கம். (மேருமலையாகிய) வில்லானது வளைதற்கு முன்னே முப்புரங்களைச்
சுட்டெரிக்கக் கோபித்த ஒளிபொருந்திய புன்னகையைக் கொண்ட அழகனே ! வணக்கம்.
ஈண்டும் மேலும்
வணக்கம் என வருந்தோறும் ‘ உனது திருவடிகட்கு-வணக்கம் ’ என இசையெச்சம் கூட்டிப்பொருள்
கொள்க.
கனிவு உறா-கனியா
என ஒரு சொல் நீர்மைப்படும். தந்தவா - ஈறுகெட்டு அயல்நீண்ட விளிப்பெயர். போற்றி-வணக்கம்
; இகரவிகுதிபெற்ற விணைப்பெயர், மறதி என்பது போல. போற்று, பகுதி ; இ, புடைபெயர்ச்சிவிகுதி,
உகரக்கேடு சந்தி. இவ் வருந்தமிழ்ச் சொல்லின் பெருமையை எமது ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம்
அவர்கள் எழுதிவரும் திருவாசக விரிவுரை 35-ம் பக்கத்திற் காண்க. போற்றி என்பதுனுள் இகரம்
செயப்படுபொருள் விகுதி எனக்கொண்டு வணங்கப் படுவது எனப் பொருளுரைத்தலும் ஒன்று. வாழிய என்பது
வாழி எனவந்தாற் போல, போற்றிய என்னும் வியங்கோள் போற்றி என வந்ததெனக் கொண்டு காக்கஎனப்
பொருள் கூறலும் ஒன்று நாயினேன்-நாய், பகுதி; இன், சாரியை; ஏன், தன்மை ஒருமை விகுதி : நாய்
போல்வேன் என்பது பொருள். களவில் ஈசன்-களவின்கீழ் எழுந்தருளியுள்ள சிவபெருமான்.
வான்-வான்கண் உலவும் ; ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கன. பனிநிலா, பண்புத்தொகை.
‘நிலாவுடன்’ என்பதில் உடன் மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. வார் சடை-வினைத்தொகை.
சடைப் பரம-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை. பரம, குழக ஈறுகெட்ட
விளிப்பெயர்கள். குனிவு-
|