த
106 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
தேவி இடப்பாகத்தில்
வாழும் இறைவனே ! வணக்கம். தொன்று தொட்டுள்ள எனது தீவினையாகிய பகையைப் போக்கியருளும்
பாவநாசனே ! வணக்கம். வருத்தும் கோபத்தையுடைய புலியின் கோடமைந்த தோலைப் பட்டு உடையாகக்
கட்டிய இடையை உடையவனே! வணக்கம். செந்தமிழ் (இசைத்தலில் வல்ல) சீகாழிப் பதியில் திருவவதாரம்செய்த
கௌணிய கோத்திரத்தரான (திருஞானசம் பந்த நாயனார்) புகழ்ந்து பாடிய திருக்களா நீழலமர்
கடவுளே ! வணக்கம்.
ஏகாரம் ஈற்றசை.
குழவி-இளமையுடையது;
இளமை குறிக்கும் குழ வென்னும் உரிச்சொல்லடி யாகப் பிறந்த பெயர்: ‘ மழவும் குழவும் இளமைப்
பொருள ’ என்பது தொல் காப்பியம். வெண்ணகை என்பதில் வெண்மை ஒளியுணர்த்தி நின்றது. இடத்து-இடப்பாகத்தின்
கண். குரிசில்-ஆண்பாற் பெயர். வினைப் பகை-பண்புத்தொகை. பாவ நாசன்-பாவத்தை நாசம் செய்பவன்.
காய்தல்-அழித்தல். காய் சினம்-முக்கால வினைத்தொகை. உழுவை-புலி. வரி-கோடு. ‘தோல்
அசைத்த பட்டு உடை மருங்கு’ தோல் பட்டு உடை அசைத்த மருங்கு என இயைக்க. மருங்கினோய்யடியாகப்
பிறந்த பெயர். செந்தமிழ் என்பதைக் கவுணியனுக்கு அடையாக்குக ; கமுமலத்திற்கு அடையாக்கினும்
ஆம். கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரு திருப்பெயர்களுள் ஒன்று. கௌணியன் என்பது
குடிப்பெயர்.
சீகாழிக்குரிய
பன்னிரு திருப்பெயர்களையும்,
பிரமபுரம்
வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத்
தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவையம்.
பரவுதிருக்
கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் எனவரும் சேக்கிழார் திருவாக்கால் அறிந்துகொள்க.
திருஞானசம்
|