த
112 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
ஙனம்) உரைத்ததில்
ஒன்றேனும் நின் செவிக்கெட்டியதில்லையோ ?
எட்டியிருந்தால்
என் குறைகள் தீர்ந்திருக்கும் என்பது கருத்து. குறைகளாவன, உடற்சுமையைச் சுமந்துழலல்,
சிவபெருமானை இருகண்ணாரக் காணப் பெறாமை முதலியன. செய்யுள் 87, 88, 90 காண்க.
‘நின்திருத்தொண்டு காதலித்த (நாள்) ஆதி(யாக)’ என்க. ஆதி என்பதை விளியாக்கினு
மமையுமேனும் மேற்செய்யுளினிறு தியில் அவ் விளி பெறக் கிடந்தமையின் ஈண்டும் கோடல்
சிறப்பன்று. செய்யுள்-தொழிலாகுபெயர். காதல் நண்பு-ஆசையோடு கூடிய தோழமை.
சிவப்புற-சிவக்க; ஒரு சொல் நீர்மைத்து.
சிற்றறிவுடைய
உயிர்களால் அறியப்படாத பெரும் புகழுடையனாதலால், அன்பின் வழிப்பட்டு என் சிற்றறிவிற்
கெட்டிய அளவாக உன் புகழைப் பாடினேன் என்பார் ‘காதலித் தறிவு சென்றமட்டாக நின்புகழ் ஓது
செய்யுள்’ என்றார். உன் புகழைப் பாடுதலல்லால் என் குறைகளைக் கூறுதல் காரணமாகப்
பாடிலேன். ஆயினும் துன்ப உணர்ச்சியின் மிகுதியால் என்னையும் அறியாமல் என்குறைகள்
உன் புகழோடு விரவி வெளிப்பட்டன என்பார் ‘நின் புகழ் ஓது செய்யுளிற் குறை யுரைத்தது’
என்றார். குறையிரந்தும் வேண்டத்தகாத ஒரு கருமத்தை, ஏவி வேண்டிய ஒரு கவிஞனுக்கு இசைந்து நீ
அவன் ஏவல் வழி நின்று அக்கருமத்தை முடிக்க நின் திருப்பாதம் சிவக்க நடந்தருளினாய் ;
அங்ஙனம் தகாததொன்றையும் யான் இரந்தும் வேண்டிலேன் ; என் குறை முடித்தற்கு நீ நின் பெருமைக்
கேலாத எதுவும் செய்ய வேண்டிற்றுமில்லை; இருந்தும் யான் தீர்க்கவேண்டிப் பல்காற் குறையிரந்து
கூறிய குறைகளில் ஒன்றையும் இதுகாறும் தீர்த்திலாமையை நோக்கின் யான் உரைத்த குறைகளில்
ஒன்றேனும் நின்செவிக் கெட்டிலது போலும் என்பார் ‘ கவிஞன் ஏவலும் கங்குலிற் கழற்கால்
சிவப்புறத் தூது சென்றுவா ’ என விளித்து
‘ஓது செய்யுளிற் குறையுரைத்ததொன்றும் நின்செவிக்குற்ற தில்லையோ ’ என்றார்.
|