த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
35 |
மிகுந்த
வாழ்க்கையையும் சிறப்புகள் பலவற்றையும் ஒரு சேரத் தரும் செழித்த செல்வப்பொருள் முதலிய
(இவை) யாவற்றையும், (பெற்றாலும் அவற்றை விரும்பிப் பொருட்படுத்தி அவற்றால் தம்மைப்
பொருள்) உடையவர் என்று கருதுவரோ? (கருதார்.)
ஒக்கல்-சுற்றம்.
அடைய-ஒரு சேர. நல்கும்-கொடுக்கும். தொடையல்-மாலை. வேணி-சடை. ‘உடையம்’ என்பதும் பாடம்.
சிவபெருமான் திருவடிக்காளானோர் உற்றார் உடைமைகளை வேண்டார் என்பதனை,
உற்றாரை
யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை
யான்வேண்டேன் கற்பனவு மினியமையும்
குற்றாலத்
தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின்
மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
என்றெழுந்த
திருவாக்கினும் காண்க. ‘சீர் அடைய நல்கு செழும் பொருள்’ என மொழிமாற்றிப் பொருள்கொள்க.
பொருள் எல்லாச் சீரும் தரும் என்பதுபற்றி ‘முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்’
என்றார் திருவாதவூரடிகளும்.
(26)
27.
மனத்தை
யான்தினம் வணங்குவன், மின்னென
வைகலும் நிலையற்ற
தனத்தை வாழ்வினை
நிலையென மதித்துழல்
ஆசையில்
தளராதே,
புனத்து ழாய்முகில் போற்றிடுங் கருவைவாழ்
புண்ணியன்
பாலற்காச்
சினத்த காலனை
உதைத்தவன் பங்கயச்
சேவடி
வணங்கென்றே.
(தோன்றிமறையும்)
மின்னலைப்போல என்றும் நிலையற்ற பொருளினையும் வாழ்க்கையினையும் நிலையென்று கருதிச் சுழன்று
திரியும் விருப்பத்தால் தளர்ச்சி யடையாமல்,
|