த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
37 |
பெருமானே ! திருக்கருவையில் எழுந்தருளிய எமது பரமேன ! உன்னை வணங்கத் தலையைத் தந்தாய் ; உனது
புகழைவாழ்த்த நாவைத் தந்தாய்; கூட்டுறவுகொள்ள அடியவர் திருக்கூட்டைத்தையுங் காட்டி
யருளினாய். இவையல்லாமல் இனி யான் பெறும் பயன் வேறுளதோ ? (இல்லை.)
இணங்க-சேர.
துணங்கை-ஒருவகைக் கூத்து. கணம்-கூட்டம். ஆடு அரங்கு-நடனமேடை. குழகன்-அழகுடையவன்-சிவபெருமான்.
துணங்கையாவது,
இருகைகளையும் முடக்கி விலாப்புறத்திற் புடைத்துக்கொண்டு ஆடும் ஒருவகைக் கூத்து ; ‘ முடக்கி
யிருகை பழுப்புடை யொற்றத்-துடக்கிய நடையது துணங்கை யாகும் ’ என்பது சூத்திரம்.
வணங்க வாழ்த்த
இணங்க என்னும் வினையெச்சங்கள் ஈற்றகரம் தொக்கு என என்னும் எண்ணிடைச் சொல்லோடு
புணர்ந்தன. இவ்வாறன்றி வணங்கு என, வாழ்த்து என, இணங்கு என என்று பிரித்துப் பொருளுரைப்பின்
‘ நின்புகழ் ’ என்னும் சொற்றொடரோடு முரணுமாறறிக. ‘ என்புகழ் ’ என்பது பாடமாயின்
பிற்கூறியவாறு பிரித்துப் பொருள்கொள்வதே பொருத்தமாம்.
மனமொழி
மெய்களாற் செய்யும் வழிபாடுகளைச் செய்ய வேண்டி யாவும் தந்தாய். அவற்றால் உன்னை
வழிபடுதலிற் சிறந்த பேறு வேறுண்டோ என்பார், ‘இனிப் பெறும் பேறுண்டோ’ என்றார். மனம்
கட்டுக்கடங்குவ தரிதாகையால் சிவபெருமானையே சிந்தித்திருத்தற்குச் சிவனடியாருடனே
எக்காலத்தும் பழகியிருத்தல் வேண்டுமென்பதுபற்றி ‘இணங்கெனத் திருக்கூட்டமும் காட்டினை’
என்றார்.
(28)
|