பக்கம் எண் :

64

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

புரத்தை அக்கினி சூழும்படி புன்னகையரும்பிய பேரழ குடையவன், திருமால் துதிக்கும் திருக்களாநிழலில் எழுந்தருளிய இறைவன், என்று நினைக்குந்தோறும் எனது மனமிளக, உள்ளங்கைகள் (ஒன்றி) எனது தலைமீதேறிக் குவியும்; உடல் புளகங்கொள்ளும்; எனது இரண்டு கண்களும் குவியும்.

    குறுமூரல்-புன்னகை. குழகன்-சிவபெருமான்-அழகுடையவன்; குழகம்-அழகு.  புளகிக்கும்-சிலிர்க்கும். முகிழிக்கும்-முகிழ்க்கும்-குவியும்.

    பக்திமேலீட்டால் உள்ளம் நெகிழ்தலும், கைகுவிதலும், மேனி சிலிர்த்தலும், கண்ணிமைகள் சோர்ந்து குவிதலும் இயல்பாதலறிக.  மேனி சிலிர்த்தல் முதலியபோலவே கைகுவித்தலும் பக்திமேலீட்டால் தன் குறிப்பின்றி நிகழுமாகலின் ‘ முடியேறும் அங்கை’ எனத் தன்வினை வாய்பாட்டாற் கூறினார்.

    விம்மிதம் புளகம் போர்த்தல் விழிப்புனல் மொழிதள் ளாடல்
    செம்மைசேர் சரியை யாதி திருத்தொண்டு துதிதி யானம்
    அம்மவோ திருப்ப ணிக்கென் றீட்டுவ தழித்துண் ணாமை
    எம்மையா ளுடையான் தொண்டர் எண்வகைப் பத்தி மாதோ

என்பது திருக்குற்றாலப் புராணம்.

    அடியார்செய்யும் மறங்களை அறங்களாகக் கொண்டது சிவ பூசைக்கிடையூறு செய்த தமது பிதாவின்காலைச் சேதித்து முத்தியடைந்த சண்டேசநாயனார் முதலியோரிடத்தும், கொடியவர் செய்யும் மறங்களை மறங்களாகவேகொண்டு அன்றே யொறுத்தலைத் திரிபுரவாசிகள் முதலியோரிடத்தும் காண்க.

(55)

56. என்கண் ணிடத்தின் அகலாத செல்வன்
        எழிலார் களாவின் முதல்வன்
    வன்கண் ணர்நெஞ்சு புகுதாத நம்பன்
        மனமாச றுத்த பெருமான்