த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
75 |
கம்-வளைந்த இடம்-சூழ்ந்த
இடம். கடலாற் சூழப்பட்ட இடம் உலகம்.
உண்டு என-உள்ளது
என. உள்ளதாவது உண்மையாவது. எல்லாவற்றுக்கு முன்னுள்ளதாய், எல்லாம் தானேயாய், தனக்கொப்பது
பிறிதொன்றில்லதாய், எஞ் ஞான்றுமுள்ள உண்மைப்பொருள் ஒன்று உண்டு என மறைகள் முழங்குவது கண்டு
‘உண்டென மறைகளோதும் ஒரு தனிமுதலே’ என விளித்தார். அவன் ஒருவனே தனிமுத லாவ துணர்ந்தும்,
அகங்காரத்தால் தம்மை வேறுபிரித்துத் தாம் அவனைத் தம்மின் வேறாகக் கண்டுவிடலாம் என்றெண்ணித்
தேடமுயன்ற அயனும் மாலும் அவனைக் காண மாட்டாமல் அயர்ந்தமை கருதி ‘அண்டரும் முனிவர் தாமும்
காண்கிலர்’ என்றார். அவர்களைப்போல் யான் அகங்கரித்து ழலாமல் உன்னுள் அடங்கிய அடியனாக
நின்று உன்னைக் காண முயன்றேனாயி னும், எங்கும் நிறைந்த உன்னை அந்நிலையிற் காண்பது என்
சிற்றறிவிற் கமையா தென்பதை உணராமல் ஒரு குறியற்று உலகமெங்கும் தேடியுழன்றேன் என்பார்,
‘அடியனேன் உன்னைத் தெண்டிரைவளாகமுற்றுந் தேடினேன்’ என்றார். அவ்வாறு தேடியுழன்றும் காணாமையால்,
சிற்றவினேனாய யான் நின் பெரு நிலையை ஒருமூர்த்தத்திற்கொண்டு வழிபட்டாலன்றிக் காணமுடியாதென்னும்
உணர்வுபெற்று அங்ஙனமே வழிபட்டுக் கண்டேனென்பார் ‘ தேடித்தேடிக் கண்டனன் களாவினீழல் ’ என்றார்.
(65)
66.
தானென உருவ
மாகிச்
சங்கற்ப
விற்பங் கொண்டு
வானக மாகி மண்ணாய்க்
கடல்களாய்
மலைக ளாகி
ஈனமாம் மனப்பேய்
செய்த
இந்திர சாலந்
தன்னால்
நானுனை யுணர மாட்டேன்,
களாநிழல்
நண்ணு வானே !
|