பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

79

    தொடக்கு அறா-பொருத்தம் நீங்காத.  அறா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அறு-பகுதி.  நேயம்-நேசம்-அருள்; சகரத்துக்கு யகரம் போலி.  கதி-புகலிடம்.

    நாதன் எனை ஆண்டுகொண்டான் என வினை முடிவு செய்க. 

    தாம் உழந்த வெந்துயர், ஐயன் வந்தாண்ட அக்கணமே அகன்றதென்பது கருதி ‘ அதிசயம் உளத்திற் காட்டி ’ என்றார். சிவபெருமான் எள்ளிலெண்ணெய்போல உள்ளும் புறமும் தானேயாய் நிறைந்து நிற்கும் பெற்றிமையை அவனருளே கண்ணாகக்கண்டேன் என்பார் ‘அகம்புறம் தானாக் காட்டி’ என்றார்.  திருவருளே சித்குணமாகக் கொண்டவன் என்பார்.  மேல் ‘தையலோர் பாகம்வைத்து வாழுமையன் ஆண்டுகொண்டான்’ என்றதற்கேற்ப ஈண்டுத் ‘ தொடக்கறா நேயங்காட்டி ஆண்டுகொண்டான்’ என்றார்.  என் பிறவித்துன்பத்தை நீக்கிப் பேரின்ப உணர்ச்சி தந்தான் என்பார் ‘சிந்தையிற் களிப்புங் காட்டி’ என்றார்.  மதி முதனிலைத் தொழிலாகு பெயராய் மனத்தின்மே னின்றது.

(69)

70.  நாதனே! கவிஞன் ஏவ
        நள்ளிருட் போதிற் சென்ற
    தூதனே! இமய வல்லி
        துணைவனே! கருவை யானே!
    போதநே யத்தி னால்நின்
        பொலன்கழற் றொண்டு பூண்டும்
    ஏதம்நீ அகற்றி டாமல்
        இருப்பதும் இசைய தாமோ?

    இறைவனே ! (நின்னைப் பாடும்) ஒரு கவிஞனான (சுந்தரன்) உன்னை ஏவ, நடு இராத்திரியில், பரவையார்பாற் சென்ற தூதுவனே !  இமயமலையில் தோன்றிய உமையம்மையின் கேள்வனே !  திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே ! சிவஞானத்தின் வழி வந்த அன்பினால் உன் பொன்போலும் அரிய திருவடிக்கு, அடியேன் அடிமை