த
94 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
மாயா காரியமான
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பையல்லாத அருளுருவத் திருமேனிக்கு முகம் வியர்த்தல் முதலியவற்றை
ஏற்றிக் கூறுதல் சொல்லளவிலேயாம்.
முகலிங்கன் தாள்களும்
முறுவலும் முகமும் புருவமும் விலோசனமும் வேணியும் கையும் காண்பவர் புவியிடைப் பிறவார் என்க. முகலிங்கன்
என்பதில் ஆறாம் வேற்றுமைக்குரிய உடைய என்னும் சொல்லுருபு தொக்கது, கிழமைப்படுவன பலவாதலின்;
அகர உருபு தொக்கதெனினுமாம்.
(84)
85.
பிறந்த யாக்கைகள்
அளப்பில
பெருங்கடற்
புவிக்குள் ;
இறந்து
போயதல்
லால்அவற்
றெய்திய துண்டோ?
கறந்த பால்நிற
வண்ணனைக்
கருத்துற
இருத்திச்
சிறந்த யாக்கையீ
திதற்குநான்
செய்வதும்
உளதோ ?
பெரிய கடல் (சூழ்ந்த)
உலகத்தில் (யான் கொண்டு) பிறந்த உடம்புகள் அளவில்லாதன ; இறந்து போனமையல்லாமல் அவற்றால்
(நான்) பெற்ற பேறு ஏதேனும் உண்டோ ? (இல்லை). கறந்த பாலின் நிறத்தை யொத்த நிறமுடை யவனை
உள்ளத்தில் பொருந்தி உறையச் செய்து மேன்மை பெற்ற உடம்பு (இப்பொழுது யான் கொண்டுள்ள)
இதுவே. (ஆதலின்) இவ்வுடம்பிற்கு யான் செய்யத்தக்க கைம்மாறும் உண்டோ ? (இல்லை).
அளப்பு இல-அளவு
இல்லாதன ; அளப்பு, கலப்பு நடப்பு என்பனபோல புகரவிகுதி பெற்று வந்த தொழிற்பெயர் ; இல, எதிர்மறைப்
பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர். புவி-பூமி. போயது-போனமை ; காலங்காட்டும் தொழிற்பெயர்
; ‘போயவல்லால்’ எனப் பாடத்தை மாற்றிவிட்டுப் ‘ போய் ’ அகர
|