த
22 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
16.
எவன்உயிர்க்
குயிராய் எள்ளுமெண் ணெயும்போல்
எங்கணும்
இடையறா நின்றான்,
எவன் அனைத்
துலகும் ஈன்றுகாத் தழிக்க
இறைமைசால்
மூவுரு வெடுத்தோன்,
எவன்முத லிடையீ
றின்றிஎஞ் ஞான்றும்
ஈறிலா மறைமுடி
யிருப்பான்,
அவன்எனைப் புரக்கத்
திருக்களா நீழல்
அமர்ந்தருள்
புரிந்தகா ரணனே.
உயிர்களுக்கோ
ருயிராய் எள்ளும் அவ்வெள்ளில் நிறைந்த எண்ணெயும் போல எவ்விடத்தும் இடையறாமல் நின்றவன்
எவன், எல்லா உலகத்தையும் படைத்து அளித்து அழிக்கத் தலைமையமைந்த(பிரமன் விஷ்ணு ருத்திரன்
என்னும்) மூன்று திருவுருவங்களையுங் கொண்டருளினவன் எவன், (தனக்கொரு) முதலும் இடையும்
முடிவுமில்லாமல் எந்நாளும் அழிதலில்லாத வேதத்தின் உச்சியில் இருப்பவன் எவன், அவனே, என்னைப்
பாதுகாக்க அழகிய களாநீழலில் அமர்ந்து (எனக்கு) அருள்செய்த காரணன் ஆவான்.
இறைமை-தலைமை.
சால்-பொருந்து. இடையறாமல் எனற் பாலது இடையறா என ஈறு குறைந்து நின்றது. புரக்க-காப்பாற்ற.
காரணன்-காரணமானவன்.
காரணம், முதற்காரணம்
துணைக்காரணம் நிமித்தகாரணம் என மூவகைத்து. முதற்காரணம் தானே காரியமாவது ; ‘மண்ணாலான குடம்’
என்பதில் மண்போல. துணைக்காரணம் முதற்காரணம் காரியப்படுமளவும் உடனிருந்து பின் நீங்குவது ;
‘திகிரியாலான குடம்’ என்பதில் திகிரிபோல. நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களைக்
கொண்டு காரியத்தைச் செய்யும் கருத்தா ; ‘குயவனாலான குடம்’ என்பதில் குயவன்போல. இவற்
|