த
60 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
யின ‘ஒழியாது மல்கு
கருவேச’ என விளித்தார். அலை எழுந்தும் விழுந்தும் மாறுதல்போல என் மனமும் காதலால் எழுந்தும்
கவலையால் விழுந்துந் தடுமாறிச் சுழல்கின்றதென்பார் ‘ அலைமாறு போல மனமா லுழன்று விடவோ ’
என்றார்.
(51)
52.
உருவாகி நிற்றி ; அருவாகி நிற்றி ;
உயிரோடெ
வைக்கும் உறவாய்,
மருவாகி நிற்றி
; மலராகி நிற்றி ;
மறையாகி
நிற்றி ; மறையின்
பொருளாகி நிற்றி
; உனையான றிந்து
புகழ்கின்ற வாறும் அறியேன் ;
கருவாபு
ரிக்குள் உறைதேவ தேவ !
கதியேதெ
னக்கு மொழியே.
கருவாபுரியில் எழுந்தருளிய
திருமால் முதலிய தேவர்களுக்குத் தேவனே ! திருவுருவங்கொண்டு நிற்கின்றாய்; அரூபியாயும் நிற்கின்றாய்;
சித்துப்பொருள்களோடு எப்பொருளுக்கும் உறவாய் விரவி, மலரும் வாசனையும் போல நிற்கின்றாய்
; வேதமாகி நிற்கின்றாய்; வேதத்தின் பொருளாகி நிற்கின்றாய்; நீ இவ்வாறு நிற்றலால் நான்
உன்னை ஐயமறவுணர்ந்து, உன்னை வாழ்த்தும்வகையையும் அறியேன் ; (உன்னை வாழ்த்துதற்கு இயலாதேனும்
எனக்கு உன்னையன்றித்) துணையேது? கூறியருளாய்.
நிற்றி-நிற்கின்றாய்.
(முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று. நில்-பகுதி, து-சாரியை, இ-விகுதி. லகரம் றகரமானதும்
உகரம் கெட்டதும் சந்தி.)
உருவும்
அருவுமாகவும், உலகத்தோடு முயிர்களோடும் ஒன்றியும் ஒன்றாமலும், மலரும் மணமும்போலவும், வேதமேயாகவும்
வேதத்தின் பொருளாகவும்-இப்படி இன்னது என்று துணியப் படா இயல்பினையாதலின் உன்னை அறிவதரிதாயுள்ளது.
ஆதலின் ‘ அறிந்து புகழ்கின்றவாறும் அறியேன் ’ என்றார்.
(52)
|