சிறந்தது போலும். முற்காலத்தில் முருகக் கடவுள் இருந்ததென்பதற்குரிய அறிகுறிகள் இன்றும் உள்ளன வென அறிஞர் புகல்கின்றனர். சங்ககாலத்திற்குப்பின் தோன்றிய நூல்கள் பல அறுமுகன் படைவீ டாறனுள் ஒன்றாய் இச்சோலைமலையை எடுத்துக்கூறுவதும் இதனை யுணர்த்தும். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழிலும் இச் சோலைமலை முருகற்குரிமையுடையதாகப் பாடப்பட்டுள்ளது. இஞ்ஞான்று அழகர்க்குரிய சிறப்பு மலையாகத்தான் அமைந்து நிற்கிறது அது. | தலப்பெயர் | அலங்காரன்மலை, அழகர்கோயில், அழகர்மலை, இருங்குன்றம், குலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, கோலமலை, சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, திருமலை, திருமால்குன்றம், தென்திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை, பழமுதிர்சோலைமலை, மாலிருங்குன்றம், வனகிரி என்பன இத்தலத்திற்குச் சிறப்பாக வழங்கப்படும் பெயர்கள். | அழகர், நாச்சியார் பெயர் | அலங்காரர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத்தோளர், சோலைமலைக்கரசு, தெய்வசிகாமணி, மலையலங்காரர், மாலலங்காரர், பரமசுவாமி என்பன இத்தலத்துப் பெருமாளைக் குறித்து வழங்கப்படுகின்றன. நாச்சியார் பெயர், சௌந்தரவல்லியென்றும், கல்யாணசுந்தரவல்லி யென்றும் வழங்குகிறது. ஆண்டாள் அமர்ந்திருக்கும் திருக்கோயில் தனியாக உளது. | தீர்த்தம் | இத்தலத்தின் முதன்மையாகிய தீர்த்தம் சிலம்பாறு என்பது. அது தேனாறு, நூபுரகங்கை, பகவன்பாத தீர்த்தம், மஞ்சீரநதி எனவும் பெயர்பெறும். இது திருக்கோயிலுக்கு வடக்கே இரண்டரை மைல் தூரத்தில் இருக்கிற* | | |
|
|