பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது37



திருச்சிற்றம்பலம்

திருமாலிருஞ் சோலைமலை

அழகர் கிள்ளைவிடு தூது

______

காப்பு

வெண்பா

தெள்ளு தமிழ்அழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்.

நூல்

கிளியை விளித்தல்

1     கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
     நீர்கொண்ட பாயல் நிறங்கொண்டு-சீர்கொண்ட
     வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
     செய்யுங் கிளியரசே செப்பக்கேள்-வையமெலாம்
     வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
     கேளா தவர் ஆர்காண் கிள்ளையே-நாளும்
     மலைத்திடு மாரனொற்றை வண்டிலும்இல் லாமற்
     செலுத்தியகாற் றேரைமுழுத் தேராய்ப்-பெலத்திழுத்துக்