பக்கம் எண் :

10

                    திரு ஆநிலை

11.



வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை
சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்க நீ
ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ
வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) பசுபதி ஈச்சுரரைப் பூசித்துக் கடல் சூழ்ந்த பூமியையும்
மற்றுமுள்ள அண்டங்களையும் பிரமனைப்போற் படைத்தற் றொழிலைப்
பூண்ட காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர் - அது
உள்ளது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு:- ஒரு காலத்திற் காமதேனு கரூர்ச் சிவபெருமானைப்
பூசித்து வணங்கிற்று. பிரமதேவனைப் போல் உலகத்தைப் படைக்கும்
ஆற்றலைப் பெறுவாய் எனத் திருவாய் மலர்ந்தருள அவ்வாறே பெற்றுச்
சராசரங்களை முன்போலப் படைத்தது. அக்கரூருக்கு வடதிசையிலே
புசிப்பு நிமித்தம் வெண்ணெய் மலையென ஒன்று வகுத்துப்
பூசித்துக்கொண்டிருக்கிறது. இதனால் இத்தலத்துக்குத் திரு ஆநிலை
யெனப் பெயராயிற்று. (இது வெங்காலநாடு)

                      (மேற்)

வருதிநீ சுரபி தொல்லை மறையவன் போல வேலை
பொருதிரை யாடை ஞாலத் தெமையருச் சனைபு ரிந்து
தருகுதி சராச ரங்க ளனைத்தையு மெனமுன் றாழா
விரைமலர் தூவித் தேநு விடையொடும் போயிற் றன்றே.

                                     (கரூர்ப் புராணம்)

              திருப்பாண்டிக் கொடுமுடி

12.



நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப்பூத்
தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்
முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்
வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே

     (க-ரை) பூச்சாத்த முடியாதவாறு உயர்ந்துள்ள சிவலிங்கப்
பெருமானது திருமுடியானது, குறுகிய வடிவுள்ள அகத்தியர் கைப்
பிடியிலடங்கப் பூமியுள் தாழ்ந்த மகுடேசுரர், எழுந்தருளியுள்ள கறையூர்
(திருப்பாண்டிக் கொடுமுடி) இருப்பது கொங்கு மண்டலம் என்பதாம்.