பக்கம் எண் :

33

     கொங்குமண்டலத்தார் பெரிய நாடு என்று பாராட்டும் கீழ்கரைப்
பூந்துறைத் தலைமை நகரான திருச்செங்கோட்டில், மலை முதற்படி
அருகிலுள்ள அழகிய விநாயகர் சந்நிதியில் படிகாரர்கள் சபை ஒன்று
பன்னிரண்டு ஆண்டு அளவில் கூடுகிறது. அப்பொழுது இனிக் கம்பர்
உரிமையிற் பங்கு பெறக் கூடியவர் இவரெனத் தேர்ந்து எடுத்துச் சபைத்
தலைவரால் வெற்றிலை கொடுக்கப் பெறுவது. அதன் பின்னர்தான் புலவர்
அட்டவணையிற் பெயர் பதியப்படுகிறது, இச்சங்க காலத்தில் அப்போது
ஏற்படுஞ் சங்கத் தலைவரால் நியமன தாம்பூலத் தரப்பெறாதவர்
பன்னூலாய்ந்த பாவலராயினும், படி (வரி)ப்பணத்தில் பங்கு
கொடுக்கமாட்டார்கள் கலியாணம் முதலிய சபையில் வாழி சொல்லுந்
தகுதியனல்லன் என்பது அச் சங்கத்தாரின் கொள்கை.

     கொங்கு வேளாளர் கலியாணங்களில் இப்புலவர்கள். கம்பர் வாழி
சொல்லாவிடில் மணச்சடங்கு பூர்த்தியானதாக இல்லை. புலவர் அப்பொழுது
வராவிடில் அவர்களது உரிமையான சன்மானத்தை எடுத்து வைத்தபின்னரே
பார்ப்பார் முதலியோர்களுக்குப் பூரி முதலியன உதவும் வழக்கம் ஐந்து
படிகாரரிருக்கிற நாடுகளில் இன்னும் நடந்து வருகிறது. விவாகஞ்
செய்வோரிடத்து ஏதேனுஞ் ஜாதி ஆசார முதலிய குறைகளிருந்தால் புலவர்
வாழி சொல்லப் புகமாட்டார். புதிதாகப் பெண் கேட்கப் புறப்படும் பொழுது,
மற்றுஞ் சில ஜாதி ஆசார நற்காரியங்கள் பேசும் பொழுதும், செய்யுங்
காலத்தும், தமிழ்ப் புலவர்களில் ஒருவரேனும் இருக்க வேண்டுமென்று
கொங்கு வேளாளர்கள் விரும்புகிறார்கள். இதுநாட்டதிகாரம் பெற்றபழைய
பரம்பரையைச் சார்ந்தவர்களிடத்து இன்றியமையாதது, பெண்பாலரும்
புலவர்களை மிக்க உபசரிக்கிறார்கள். புதிதாக உள்ள ஐசுவரியவான்களை
விடப் பழைய பரம்பரையைச் சேர்ந்த ஏழையை மனதாரப் புலவர்கள்
மதிக்கிறார்கள். இவர்கள் சேர வேளாளர்கள் என்கிறார்கள். கொங்கு
வேளாளர்களைப் போல நன்மை தீமைச்சடங்கு ஆசாரங்கள்
நடத்துகிறார்கள்.

     புலவர் வகுப்பினர் கொங்குமண்டலமே அன்றிப் பாண்டி மண்டலத்துச்
சங்கர நாராயணர் கோயில், ஊற்றுமலை சொக்கம் பட்டி புளியங்குடி
எட்டயபுரம் முதலிய இடங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுள்
வேறுபாடுகள் பல. இப்பொழுது புலவர் வகுப்பிற் சிற்சில இடத்து சாதிக்
கலப்புக் கொண்டிருக்கிறதென்று சொல்வாருமுளர்.