தேவியுடன் கலந்துஅவுணன் திளைக்கும்நாளில், தேவரெலாம் திருமால்பால் திரண்டுசென்றே, மேவியபாற் கடல்அடங்க முறையிட்டார்ப்ப மேல்விளைந்த படிஅடியேன் விளம்பக்கேள்நீ.
(280)